கம்பீர் இத பண்ணுவாருன்னு எங்க எல்லாருக்கும் தெரியும்.. நான் ஆல்ரெடி அதுக்கு தயார் – திலக் வர்மா பேட்டி

0
14
Tilak

தற்போது இந்திய டி20 அணியில் தொடக்க வீரர்களைத் தவிர மற்றவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரியும் என திலக் வர்மா கூறியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் படேல் மூன்றாவது இடத்தில் வந்தது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. அதே போட்டியில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த திலக் வர்மா ஐந்தாவது இடத்தில் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

எங்களுக்கு தெரியும்

தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு முன்பாக பேசிய இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடக்க வீரர்களை தவிர மற்ற அனைவரும் எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்யும் அளவுக்கு நெகிழ்வாக இருக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்படியே ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் ஆர்டர் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இது வெளியில் இருந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது “எங்கள் அணியில் தொடக்க வீரர்கள் தவிர மற்ற அனைவரும் எங்கு வேண்டுமானாலும் விளையாடும் படி நெகிழ்வாக இருப்பார்கள். நான் மூன்றாம் இடம் முதல் ஆறாம் இடம் வரையில் எங்கும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். நாங்கள் இதை செய்ய வேண்டும் என எங்களில் எல்லோருக்குமே தெரியும்”

- Advertisement -

அக்சர் படேலை ஏன் அனுப்பினோம்?

“உங்களுக்கு புரியும் படி நான் சொல்கிறேன். டி20 உலகக் கோப்பை முதல் அக்சர் படேல் சில நேரங்களில் மேலே அனுப்பப்பட்டு சிறப்பாக விளையாடியிருக்கிறார். அன்றைய நாளில் யாரை அனுப்புவது அணிக்கு நன்மையாக இருக்கும் என நாங்கள் முடிவு செய்கிறோமோ அவரை அனுப்பி வைக்கிறோம். அவரும் எல்லா நேரங்களிலும் சிறப்பாக செய்திருக்கிறார்”

இதையும் படிங்க : விராட் கோலியை விட.. இந்தத் திறமை கொண்ட வீரர் 2027 உலகக் கோப்பைக்கு நிச்சயம் தேவை – இந்திய முன்னாள் வீரர்

“நாங்கள் சிறுவயதிலிருந்தே பயிற்சி செய்து வருகிறோம். மேலும் அடிப்படையை பின்பற்றியும் வருகிறோம். நீங்கள் மனதளவில் வலிமையாக இருந்தால், நீங்கள் எந்த இடத்தில் ஆடினாலும் வெற்றி பெறுவீர்கள். எனவே என் அளவில் நான் மனதளவில் வலிமையாக இருக்க விரும்புகிறேன். நான் எந்த இடத்தில் விளையாட சென்றாலும் என்னால் அணிக்கு என்ன செய்ய முடியும்” என்று மட்டும் தான் யோசிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -