நான் கில்லை நீக்க மாட்டேன்.. ஜெய்ஸ்வாலையும் கொண்டுவந்து இதை செய்வேன் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
17
Jaiswal

தற்போது இந்திய டி20 அணியில் இருந்து துணை கேப்டன் சுப்மன் கில்லை நீக்க கூடாது என ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருந்து வரும் சுப்மன் கில் டி20 வடிவத்தில் பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவர் தொடர்ந்து ரன்கள் எடுக்க சிரமப்பட்டு வருகின்ற காரணத்தினால் இந்திய டாப் ஆர்டர் பலவீனமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அவரை நீக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் வேண்டும்

தற்போது டி20 வடிவத்திற்கு கில்லை விட பொருத்தமானவராக ஜெய்ஸ்வால் இருப்பார் என பல இந்திய முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள். இயல்பாகவே அதிரடியாக விளையாடும் ஜெய்ஸ்வால், முதல் கியரில் இருந்து ஐந்தாவது கியர் வரையில் வேகமாக விளையாட முடிந்தவர். இதன் காரணமாக அதிரடியாக ஆடும் அபிஷேக் ஷர்மா ஆட்டம் இழந்தாலும் ஜெய்ஸ்வால் நம்பிக்கை தருவார்.

இன்னொரு பக்கத்தில் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் கில் இடத்திற்கு வரும் பொழுது, பேட்டிங் வரிசையில் கீழே ஃபினிஷர் ரிங்கு சிங்கை அணிக்குள் கொண்டு வர முடியும். இதன்மூலம் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் துவக்க முதல் கடைசி வரையில் மிகவும் வலிமையாகவும், எந்த இலக்கையும் அடைய முடிந்த அணியாகவும் இருக்கும். எனவே கில் நீக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்து வலிமையாகி வருகிறது.

- Advertisement -

கில்லை நீக்க வேண்டாம்

இதுகுறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “கில் இரண்டு மூன்று முறை தோல்வி அடைந்திருக்கிறார். எனவே நாம் உடனடியாக அவரை மாற்ற வேண்டும் என்று பேசுகிறோம். அவருடன் நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்களுக்கு மேல் வரிசையில் அதிரடியாக விளையாடுவதற்கு நிறைய பேட்ஸ்மேன் இருப்பதால், அவர் போன்ற ஒருவர் உங்களுக்கு தேவை. உங்களிடம் ஜெய்ஸ்வால் இருக்கிறார் அவர் மிகவும் சிறப்பானவர். ஆனால் நான் அவரை கில்லுக்கு பதிலாக வைக்க மாட்டேன்”

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே இந்த சம்பவத்தை செய்யும்.. இந்த 3 பேர் வாங்குவார்கள்- ஆகாஷ் சோப்ரா

” நான் அபிஷேக் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரர்களாக வைத்து மூன்றாவது இடத்தில் கில்லை விளையாட வைப்பேன். துவக்க இடத்தில் இருவரும் இடதுகை வீரர்களாக இருப்பதால் பந்துவீச்சாளர்கள் அவர்களை சமாளிக்கலாம். இது இந்திய அணிக்கு ஒரு தலைவலியாகவும் இருக்கும். ஆனால் ஒரு நல்ல வீரர் மேலே இருப்பது நல்லதுதான். கில்லை நான் பீதி அடைய வைக்க மாட்டேன். அவரிடம் கேரக்டர் இருக்கிறது. கில் உங்களுக்காக பெரிய போட்டிகளில் ரன்கள் எடுப்பார். நான் அவரை நீக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -