எங்களுக்கு இன்னும் 8-9 மேட்ச் இருக்கு.. நாங்க பண்ற சில விஷயங்கள் இதுக்காகத்தான் – இந்திய துணைப் பயிற்சியாளர் பேட்டி

0
12
Ryan

நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி மிகச் சுலபமாக தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து இந்திய துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் பந்துவீச்சு நேற்று மிகவும் மோசமான முறையில் இருந்தது. மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது மூன்றாவது இடத்திற்கு அக்சர் படேலை அனுப்பி வைத்தார்கள். அதற்கு சரியான காரணங்கள் எதுவுமே இல்லாததால் விமர்சனங்கள் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா செய்த மாற்றம்

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா இந்திய பந்துவீச்சாளர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதை புரிந்து கொண்டது. இதன் காரணமாக இரண்டாவதாக பந்து வீச வந்த அவர்கள் குறிப்பிட்ட ஆடுகளத்தில் சரியான லென்த்தை பிடித்து வீசினார்கள். இதன் காரணமாக இந்திய அணியால் இலக்கை நோக்கி செல்ல முடியவில்லை.

அதே சமயத்தில் இந்திய பந்துவீச்சு திட்டங்கள் பலனளிக்காமல் போனதும், அடுத்து கொண்டு வந்திருக்கும் இரண்டாவது திட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்தியா தொடர்ந்து ஒரே திட்டத்தில் சென்று 20 ஓவர்களில் 213 ரன்கள் கொடுத்து விட்டது. இது உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியாக இருந்திருந்தால் இந்திய அணி பரிதாபமாக வெளியேற வேண்டியது இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சீக்கிரமாக கண்கள் சிமிட்டி விட்டோம்

இதுகுறித்து ரியான் டென்ட் டஸ்கேட் கூறும்பொழுது ” நேற்று இரவு எங்களுக்கு மோசமானதாக இருந்தது. நாங்கள் சீக்கிரமாக கண்களை சிமிட்டு விட்டோம். முதல் 10 ஓவர்கள் முடிந்து இடைவேளைக்குப் பிறகு வந்த முதல் பந்திலேயே குயிண்டன் சிக்ஸர் அடித்தார். நாங்கள் எங்களுடைய திட்டத்தில் இருந்து விரைவாக விலகிச் சென்றோம். நாங்கள் முயற்சி செய்வதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் உங்கள் திட்டம் மற்றும் உங்கள் திட்டத்தை நீங்கள் செயல்படுத்துவது குறித்து உங்களுக்கு தெரிய வேண்டும். நேற்று இரவு நாங்கள் இரண்டையும் தவற விட்டு விட்டோம்”

இதையும் படிங்க : இந்திய அணியின் கோச் மட்டுமல்ல கேப்டனும் கம்பீர்தான்.. நேத்து நடந்த சம்பவமே சாட்சி – இர்பான் பதான் பேச்சு

“நாங்கள் இப்போது பேட்டிங் யூனிட்டில் பல காம்பினேஷங்களை முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். டி20 உலக கோப்பைக்கு முன்பாக எங்களுக்கு 8 முதல் 9 போட்டிகள் இருக்கிறது. நாங்கள் 35 ரன்னுக்கு மூன்று விக்கெட் என்பது போல அடிக்கடி இந்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறோம். இதனால் பேட்டிங் வரிசையை எப்படி வலிமையாக்கலாம், ஓபனர்கள் ஆட்டம் இழந்ததும் யார் வர வேண்டும், மிடில் ஆர்டர்களுக்கு எப்படி ஒரு சரியான கனெக்சன் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -