இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயிண்டன் டீ காக் 46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
மோசமான பேட்டிங்
இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு திலக் வர்மா மற்றும் தாக்கு பிடித்து விளையாடி 34 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் பார்ட் மேன் நான்கு டிக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 51 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதுகுறித்து பேசிய கேப்டன் சூரியகுமார் யாதவ் “நாங்கள் முதலில் பந்து விஷயம் போது நாங்கள் செயல்பட்ட விதம் போதாது. நாங்கள் முதலில் பந்து வீசிய காரணத்தினால் நாங்கள் மீண்டு வந்து இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்கள் இந்த விக்கெட்டில் லென்த் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தார்கள். இங்கு கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். பனிப்பொழிவு இருந்ததால் எங்கள் திட்டம் வேலை செய்யவில்லை. எங்களிடம் இரண்டாவது திட்டம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதற்குள் செல்லவில்லை. பரவாயில்லை, அவர்கள் பந்து வீசியதில் இருந்து நாங்கள் கற்றுக் கொண்டோம்”
அக்சர் முன்னே வந்தது இதனால்தான்
“நானும் சுப்மன் கில்லும் நல்ல தொடக்கத்தை கொடுத்திருக்கலாம். ஏனென்றால் நாங்கள் எப்பொழுதும் அபிஷேக் ஷர்மாவை நம்பிக்கொண்டு இருக்க முடியாது. அவர் பேட்டிங் செய்யும் விதத்திற்கு அவருக்கு ஒரு சரியான நாள் இல்லாமல் போகலாம். நான் கில் மற்றும் சில பேட்ஸ்மேன்கள் இந்த பொறுப்பை எடுத்திருக்க வேண்டும். கில் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்துவிட்டார். அதனால் நான் பொறுப்பு எடுத்து கொஞ்சம் ஆழமாக பேட்டிங் செய்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க : 213.. கம்பீர் செய்த மெகா தவறு.. புரிந்து கொள்ளாத பவுலர்கள்.. இந்திய அணி பரிதாப தோல்வி.. மாற்றம் வேண்டும்
“அதே சமயத்தில் நான் முன்பே சொன்னது போல நாங்கள் இங்கிருந்து கற்றுக் கொள்கிறோம். நாங்கள் அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்வோம். அக்சர் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் சிறப்பாக பேட்டிங் செய்வதை நாம் பார்த்திருக்கிறோம். எனவே அவருக்கு முன்கூட்டியே இறங்க ஒரு வாய்ப்பு கொடுத்தோம். அவர் அதே வழியில் பேட்டிங் செய்வார் என்று நினைத்தோம். ஆனால் அது இன்று பலன் அளிக்கவில்லை. அடுத்த போட்டியில் என்ன நடக்கிறது?” என்று பார்ப்போம்.






