இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி பஞ்சாப் நியூ சண்டிகர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டப்ஸ், மகாராஜ் மற்றும் நோர்க்கியா நீக்கப்பட்டு ரீஸா ஹென்ட்ரிக்ஸ், லிங்கே மற்றும் பார்ட்மேன் மூவரும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
துணிந்த தென் ஆப்பிரிக்கா அணி
இன்னும் மூன்று மாதத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பது என தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதன் காரணமாக வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துவதாக கூறியிருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா டி20 அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக ஸ்டப்ஸ் இருந்து வருகிறார். இந்த நிலையில் அப்படிப்பட்ட வீரரை வைத்து பரிசோதனை செய்யும் முயற்சியாக ரீசா ஹென்றிக்ஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஆனால் டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய பிளேயிங் லெவன் முடிவாகிவிட்ட காரணத்தினால் இந்தியா மாற்றங்களை செய்யவில்லை.
இவர்தான் முக்கியமானவர்
இந்த போட்டி குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “நியூ சண்டிகர் மைதானத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடியிருக்கிறோம். சமீபத்தில் பெண்கள் கிரிக்கெட் இங்கு நடந்திருக்கிறது. ஆனால் முதன்முறையாக ஆண்கள் சர்வதேச கிரிக்கெட் இப்பொழுது தான் இங்கு நடக்கிறது. வீரர்கள் தாங்களாகவே பொறுப்புகளை புரிந்து கொள்வதும், ஆட்ட சூழ்நிலை என்ன கேட்கிறது என்பதைப் பார்த்து விளையாடுவதும் முக்கியம்”
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு அநியாயம்.. கில்லுக்காக தேவையில்லாமல் அவரை நீக்கிட்டீங்க.. உத்தப்பா கருத்து
“ஹர்திக் பாண்டியா அணிக்கு கொண்டு வரும் சமநிலை அற்புதமானது. அவர் பேட்டிங் செய்த விதம் மற்றும் நெருக்கடியான நேரத்தில் அமைதியாக பேட்டிங் செய்த விதம், மேலும் அவர் பந்து வீசிய விதமும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவரது ஓவர்களும் அணிக்கு மிகவும் முக்கியமானது. போட்டியை முழுவதும் அவர் சுமந்து சென்ற விதத்தில், அவர் காயமடைந்து வந்தவர் போலவே தெரியவில்லை. நாங்கள் அதே அணியுடன் விளையாடுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.






