கம்பீர் சொல்ற அந்த ஒரு விஷயத்தை கொஞ்சம் ஏத்துக்குறேன்.. ஆனா முழுசா அப்படி செய்ய முடியாது – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

0
17
Gambhir

இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் பேட்டிங் ஆர்டர் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும் என சொன்னதை ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறேன் என ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கு முன்பாக பேசியிருந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரர்கள் மட்டுமே நிரந்தரமானவர்கள் என்றும், பேட்டிங் வரிசையில் மீதி உள்ள இடங்களில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி களம் இறங்குவார்கள் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

கம்பீர் கருத்து

இதே போல ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வென்ற பிறகு இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் சூழ்நிலைக்கு தக்கப்படி பேட்டிங் ஆர்டரை மாற்றி அமைப்பது அவசியமாக இருக்கிறது என்றும், பேட்டிங் ஆர்டர் என்பது நிரந்தரமானது இல்லை எனவும் பேசி இருந்தார்.

பொதுவாக கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்களுடைய ரோல் என்ன என்பது குறித்து தெளிவு இருந்தால் மட்டுமே அவர்களால் சரியாக செயல்பட முடியும். அதற்கு அவர்கள் எந்த இடத்தில் விளையாடுகிறார்கள் என்பது குறித்த தெளிவும் முக்கியம். ஆனால் கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் இந்த விஷயத்தில் வேறு மாதிரியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

கொஞ்சம் ஏற்றுக்கொள்கிறேன்

இது குறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கம்பீர் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் ஆர்டரில் யாரும் எங்கும் வந்து விளையாடுவதை நான் ஓரளவுக்கு ரசித்திருக்கிறேன். ஆனால் அதற்கு ஒரு எல்லைக் கோடு இருக்கிறது. நாம் அதை அதிகமாக தாண்டி செல்லக்கூடாது. ஏனென்றால் நீங்கள் உங்கள் வீரர்களுடைய ரோலில் விளையாட முடியாது”

இதையும் படிங்க : விராட் ரோகித்துக்கு சம்பளம் குறைப்பு.. கில்லுக்கு சம்பளம் உயர்வு.. ஏன் இந்த மாற்றம்? – வெளியான செய்திகள்

“இது பேட்டிங் வரிசையில் முதல் மூன்று மற்றும் நான்கிலிருந்து ஆறு வரையில் நடக்க கூடியது. பிறகு உங்களுடைய கடைசி கட்ட பேட்ஸ்மேன்கள் வந்து விடுகிறார்கள். இதை நாம் மூன்று பிரிவாக பிரித்து ஆக்கபூர்வமாக விளையாட முடியும். போட்டியில் சூழ்நிலைக்கு தக்கப்படி வலது-இடதுகை பேட்ஸ்மேன்கள் காம்பினேஷனை உருவாக்குவதற்கு இப்படி செய்யலாம். ஆனால் அதிகமாக செய்து கொண்டே இருக்கக் கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -