தற்போது இந்திய t20 அணியில் பும்ரா தருகின்ற தாக்கத்திற்கு இணையாக தமிழகத்தின் வரும் சக்கரவர்த்தி கொடுக்கிறார் என ஸ்ரீதரன் ஸ்ரீராம் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி தொடங்க இருக்கிறது. டி20 உலக கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராக அமைகிறது.
குல்தீப்பை விட முக்கியமானவர்
தற்போது இந்திய அணியில் இரண்டு பிரதான வேகப்பந்து பேச்சாளர்கள் இடம்பெறும் பொழுது குல்தீப் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க முடியும். அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது குல்தீப்பை தாண்டி வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தமிழக முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “டி20 உலகக் கோப்பையில் இருவரும் ஒரே பிளேயிங் லெவனில் இடம் பெற முடியாமல் போகலாம். அப்படி நடந்தால் குல்தீப்பை தாண்டி வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால் வருண் சக்கரவர்த்திக்கு பவர் பிளேவில் பந்து வீசும் திறமை இருக்கிறது. ஆனால் குல்தீப் யாதவுக்கு அந்த திறமை கிடையாது. எனவே இந்த வகையில் இவருக்கு அதிகம் முன்னுரிமை கிடைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
பும்ராவுக்கு இணையானவர்
இந்த நிலையில் பும்ரா ஒரு போட்டியின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பந்துவீசி தாக்கத்தை கொடுக்க முடிந்தவராக இருப்பது போல, வருண் சக்கரவர்த்தியும் போட்டியில் எந்த இடத்திலும் பந்து வீசி தாக்கத்தை கொடுக்க கூடியவராக இருக்கிறார் என தமிழகத்தின் ஸ்ரீதரன் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விராட் ரோகித் அதை செய்யணுமா?.. கேட்டா சிரிப்பா வருது.. சின்ன பசங்க கத்துக்கோங்க – அஸ்வின் அறிவுரை
இதுகுறித்து அவர் பேசும் பொழுது ” வருண் சக்கரவர்த்தி இப்பொழுது கடினமாக உழைத்து அருமையாக முன்னேறி இருக்கிறார். இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் அவரை பவர் பிளே தாண்டி 17ஆவது மற்றும் 18வது ஓவரில் கூட பந்து வீச அழைக்க முடியும். அவரால் போட்டியின் எந்த இடத்திலும் பந்து பேச முடியும். எனவே வருண் சக்கரவர்த்தி கிட்டத்தட்ட பும்ரா போல தாக்கத்தை கொடுப்பதில் மாறிவிட்டார். அவர் தற்போது இந்திய தூண்களில் ஒருவர். அவருக்கு இந்தியாவில் கிரிப் கிடைக்கும் பொழுது மிகவும் ஆபத்தானவராக இருப்பார்” என்று கூறியிருக்கிறார்.






