சச்சின் இல்லை.. நம் நாட்டில் இவர் பிறந்ததற்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும் – முரளி விஜய் புகழாரம்

0
114

அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலமானது இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சில வீரர்களை எடுத்தால் தங்களது அணியை பலப்படுத்தி விடும்.

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரரான முரளி விஜய் இது குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு ஒரு உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாத நிலையில் 2007 ஆம் ஆண்டு அத்தனை ஏக்கங்களுக்கும் மகேந்திர சிங் தோனி முற்றுப்புள்ளி வைத்தார். டி20 உலக கோப்பையை முதன்முறையாக இந்திய அணிக்கு வென்று கொடுத்ததோடு தனது கேப்டன் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாமல் 2011ம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வெற்றி பெற்று உலக கேப்டன்களில் சிறந்த ஒருவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். மேலும் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கோப்பையை வெற்றி பெற்று தன்னை ஒரு அசைக்க முடியாத கேப்டனாக நிலைநாட்டினார். இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் தோனியின் தனித்துவம் குறித்தும் அவரது கேப்டன் பண்பு குறித்தும் சில முக்கிய கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “தோனி தனித்துவமான மனிதர் மிகவும் இயல்பான மனிதர் அவரது ஆளுமைகளை நீங்கள் பிரதிபலிக்க முடியாது. அவர் செய்வதை யாராலும் செய்ய முடியாது. அவர் சிக்ஸர்கள் அடிக்கும் விதம் ஒரு வலது கை வீரராக அந்த வகையான வீச்சு வேறு யாருக்கும் இருக்கவில்லை என்று நினைக்கிறேன். மேலும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கடைசி ஓவரை அவர் ஜோகிந்தருக்கு கொடுத்தார்.

இதையும் படிங்க:பஸ்பால் திட்டத்தை வைத்து.. ஆஷஸ் இல்ல ஒரு முட்டை கப் கூட வாங்க முடியல.. இங்கிலாந்து அணி பேசதான் லாயக்கு – முன்னாள் வீரர் தாக்கு

உண்மையில் அப்போது சீனியராக இருந்த ஹர்பஜன் சிங்கிற்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் உண்மை. ஆனால் தோனி மாற்றி யோசித்து அதனை வரலாறாக மாற்றினார். அவர் நம் நாட்டில் பிறந்ததற்காக பெருமைப்பட வேண்டும். எம் எஸ் தோனி சென்னை அணியில் எங்களுக்கு கொடுத்த வாய்ப்புகள் அருமையானது. சீனியர் வீரர் ஹெய்டனுடன் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவம். தோனிக்கு எங்களிடமிருந்து என்ன வேண்டும் என்பது அவருக்கு தெளிவாக தெரியும் அவர் திட்டங்களை அருமையாக வகுக்கக் கூடியவர்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -