ஜெய்ஸ்வால் பேட்டிங்ல இந்த 3 மாற்றங்களையும் செய்யணும்.. வேற மாதிரி லெவல் காட்டலாம் – இர்பான் பதான் அறிவுரை

0
42
Jaiswal

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்கார ஜெய்ஸ்வால் கடந்த போட்டியில் சதம் அடித்து இருந்தாலும் கூட, அவர் தனது பேட்டிங்கில் என்ன மாதிரியான மாற்றம் செய்ய வேண்டும்? என்பது குறித்து இர்பான் பதான் கூறி இருக்கிறார்.

நேற்று தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி இறுதி வரையில் ஆட்டம் இழக்காமல் 116 ரன்கள் குவித்தார். இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் முதல் சதமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

ஜெய்ஸ்வாலின் கண்ட்ரோல்

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “ஜெய்ஸ்வால் பேட்டில் இருந்து ரன்கள் வருவது மிகவும் முக்கியமானது. அவர் செட்டில் ஆகிவிட்டால் அவரிடம் இருந்து 200 ரன்கள் வரும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். நேற்று அவர் அரை சதம் அடித்ததற்கு பிறகு விளையாடிய விதத்தை வைத்து பார்த்தால், அவரால் பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியும் என்று தெரிந்து கொள்ளலாம். அவர் ஆரம்பத்தில் அடித்து விளையாட முயற்சி செய்து வெளியேற்றப்பட்டார். அவருடைய கட் ஷாட் முயற்சிகள் பலனளிக்கவில்லை”

“தற்போது அவர் மூன்று வடிவத்திலும் சதம் அடித்துள்ள இந்திய வீரராக மாறி இருக்கிறார். அவர் நேற்று பேட்டிங் போராட்டத்திற்கு மத்தியிலும் எந்தவிதமான அவசரத்தையும் காட்டவில்லை. அவசரப்பட்டு ஷாட் விளையாடச் செல்லவில்லை. போராட்டத்திற்கு மத்தியிலும் அவர் நிலைத்து நின்று விளையாட விரும்பினார்”

- Advertisement -

இந்த மாற்றங்களை செய்ய வேண்டும்

“நேற்று ஜெய்ஸ்வால் ரன்கள் எடுப்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும் பரபரப்பாகவும் இருந்தது. அவர் செட்டில் ஆனவுடன் அவரிடம் இருந்து வேகமாக ரன்கள் வந்தது. ஆனாலும் அவரது பேட்டிங் டெக்னிக் பற்றி நான் கொஞ்சம் பகுப்பாய்வு செய்ய விரும்புகிறேன்”

இதையும் படிங்க : 4-1.. சவுத் ஆப்பிரிக்கா டீம் செம அடி நம்ம கிட்ட வாங்கும்.. 2 பேர் வந்ததும் சம்பவம் உறுதி – ஸ்ரீகாந்த் நம்பிக்கை

“அவருடைய இடுப்பு ஷாட் பைன் லெக் திசையில் இருக்கிறது. இதன் காரணமாக அவரது தோள்பட்டை திறக்கிறது. மேலும் அவர் பக்கவாட்டில் செல்ல விரும்புகிறார். ஆனால் இந்த மூன்று விஷயங்களும் ஒத்திசைந்து நடக்க வேண்டும். அப்பொழுதுதான் விக்கெட் இழக்கும் அபாயம் குறையும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -