இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது. இந்த தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி 20 போட்டிகள் கழித்து டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் ஆரம்பத்தில் கொஞ்சம் பந்து வீச்சுக்கு சாதகமாகவும், பனிப்பொழிவால் இரண்டாம் பகுதியில் பேட்டிங் செய்த சாதகமாகவும் இருக்கும் என்பதால், இந்திய அணி டாஸ் வென்றது சாதகமான விஷயமாக அமைந்தது.
சுருண்ட தென் ஆப்பிரிக்கா
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் சதம் அடித்து 89 பந்துகளில் 16 ரன்கள் குவித்தார். இதற்கு அடுத்து கேப்டன் டெம்பா பவுமா 67 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். இவர்களிடையே நூறு ரன்களுக்கும் மேற்பட்ட பார்ட்னர்ஷிப் அமைந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 350 ரன்கள் தாண்டி குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அடுத்து பிரசித்தி கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் சிறப்பான பந்துவீச்சில் 270 ரன் மட்டுமே எடுத்து சூழ்ந்தது. மேலும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா 75, விராட் கோலி 65 மற்றும் ஜெய்ஸ்வால் 116 ரன்கள் எடுக்க, இந்திய அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.
நான் புத்திசாலியாக இருந்திருக்க வேண்டும்
இதுகுறித்து டெம்பா பவுமா பேசும் பொழுது ” நாங்கள் இந்த தொடரை இன்னும் சுவாரசியமாக விரும்பினோம். ஆனால் எங்களிடம் போதுமான ரன்கள் இல்லை. நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்து விக்கெட்டை காப்பாற்றி விளையாடி இருக்க வேண்டும். ஏனென்றால் இரவில் விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கிறது. இந்தியா பேட்ஸ்மேன்களுக்கு ஸ்கோர் போர்டு அழுத்தம் இல்லை. சிறப்பாக விளையாடிய அவர்களுக்கு எனது பாராட்டு. முதல் இரண்டு போட்டியில் இந்திய ஸ்பின்னர்களை நன்றாக விளையாடினோம். ஆனால் இன்று பகலில் விளையாடும் பொழுது வித்தியாசம் இருக்கிறது”
இதையும் படிங்க: ரோகித் விராட் பாய் எனக்கு இதெல்லாம் களத்துல சொன்னாங்க.. நான் முதல் சதம் அடிச்சது இப்படிதான் – ஜெய்ஸ்வால் பேச்சு
” 50 ஓவர் கிரிக்கெட்டில் ஆல் அவுட் ஆகக்கூடாது. இன்று எனக்கும் குயிண்டனுக்கும் இடையில் நல்ல பார்ட்னர்ஷிப் இருந்தது. நான் நடுவில் ஆட்டம் இழந்து விட்டேன். நான் கொஞ்சம் புத்திசாலியாக இருந்து விளையாடி இருக்க வேண்டும். நான் கற்றுக் கொள்வேன். எங்கள் கொஞ்சம் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். நாங்கள் அதையெல்லாம் செய்து இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






