வாஷிங்டன் சுந்தரின் இடம் ரியான் பராக்குக்கு கிடைக்கும்.. ருதுராஜ் மாதிரி இதை பண்ணனும் – அஸ்வின் அறிவுரை

0
65
Ashwin

இந்திய இளம் வீரர் ரியான் பராக் இந்திய ஒரு நாள் அணியில் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை கூறியிருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்தியாவுக்கு பேட்டிங் ஆல் ரவுண்டர் இல்லாமல் இருப்பது பின்னடைவாக இருக்கிறது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

பேட்டிங் யூனிட்டில் யாரும் இல்லை

தற்போது இந்திய அணிக்கு ஆல்ரவுண்டர்களாக கீழ் வரிசையில் இருந்து பௌலிங் ஆல்ரவுண்டர்கள் வருகிறார்கள். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் அப்படியானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு பேட்டிங் யூனிட்டில் இருந்து ஒரு ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது.

உதாரணமாக முதல் ஐந்து இடங்களில் விளையாடக்கூடிய யாராவது பந்து வீசக்கூடியவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இதற்காக ஆரம்பத்தில் ரியான் பராக்குக்கு இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்தது. அவர் ஆப் ஸ்பின் வீசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிங் வரிசையில் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும். தற்போது இந்த இடத்தில் தான் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரியான் பராக் இதை செய்ய வேண்டும்

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ரியான் பராக் நல்ல திறமைசாலி. அவர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 41 சராசரி வைத்திருக்கிறார். இப்போது பிரச்சனை என்னவென்றால் அவர் அசாம் அணிக்காகவோ அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவோ நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணியில் தற்போது இந்த இடத்தில் விளையாடத்தான் ஆள் தேவையாக இருக்கிறது. அவர் இதுவரையில் அதை செய்யவில்லை”

இதையும் படிங்க : தெஆ 3வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. முக்கிய ஒரு மாற்றம்.. கம்பீருக்கு அழுத்தம்.. தொடரை வெல்லுமா இந்திய அணி?

“இது ருதுராஜை எடுத்துக் கொள்ளும் பொழுது அவர் ஐபிஎல் தொடரிலேயே மூன்றாவது இடத்திற்கு வந்தார். தற்போது அவர் இந்திய அணியில் நான்காவது இடத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு தேர்வு குழு அல்லது பயிற்சியாளர் கேப்டன் என யாராவது சொல்லி இருக்கலாம். இல்லை அவராகவே முடிவு செய்திருக்கலாம். இப்படி பல்திறனை காட்டக் கூடிய வகையில் ரியான் பராக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -