இந்திய டெஸ்ட் அணியின் தொடர் தோல்விகள் குறித்து முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி தொடர்ந்து சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் ஆகி இருக்கிறது. இதன் காரணமாக பயிற்சியாளர் கம்பீர் மீது நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலம்
இந்திய டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டன் ஆகவும் ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும் இருந்த காலகட்டம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலமாக இருந்தது. இந்திய அணி உள்நாட்டில் பெரிய ஆதிக்கத்தை செலுத்தியதோடு, வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது.
இந்த காலகட்டத்தில் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டது. மேலும் இந்திய வேகப்பந்து வீச்சு யூனிட் அபாரமான முறையில் செயல்பட்டது. இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வெல்வது உலகக் கோப்பையை வெல்வதைவிட கடினம் என்று சொல்லப்பட்டது.
நான் கம்பீரை காப்பாற்ற மாட்டேன்
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசும் பொழுது ” கௌகாத்தியில் என்ன நடந்தது என்று நீங்களே சொல்லுங்கள். நூறு ரன்னுக்கு ஒரு விக்கெட் என்று இருந்தீர்கள். பிறகு 130 ரன்னுக்கு ஏழு விக்கெட் என்று சரிந்தீர்கள். இந்திய அணி அவ்வளவு மோசமா இருக்கா? இல்லை தென் ஆப்பிரிக்கா அவ்வளவு திறமையா இருக்கா? இந்திய வீரர்களும் கொஞ்சம் பொறுப்பு எடுத்து விளையாட வேண்டும். நீங்க கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சதுல இருந்து ஸ்பின் விளையாடிட்டு இருக்கீங்க”
இதையும் படிங்க : தெஆ 2வது ODI.. உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. அவசர அந்த மாற்றம் நடக்குமா?.. கம்பீர் கையில் முடிவு
“நான் கம்பீரை பாதுகாக்க மாட்டேன். அவரும் இந்த தோல்விக்கு 100% பொறுப்பு. இந்த தோல்வி நான் பயிற்சியாளராக இருக்கும்போது வந்திருந்தால் முதலில் நான்தான் பொறுப்பேற்றுக்கொள்வேன். ஆனால் அதற்குப் பிறகு அணி கூட்டத்தில் ஒரு வீரரையும் விட்டு வைத்திருக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.






