விராட் கோலி, இந்திய அணியுடன் இல்லாமல் தனித்து பயிற்சி செய்தது தொடர்பான காரணத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளக்கியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பிறகு, விராட் கோலி பெரும்பாலும் தனிப்படி தனிப்பட்ட முறையில் தான் சர்வதேச தொடர்களுக்கு தயாராகி வருகிறார். ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலியா தொடருக்காக அவர் இங்கிலாந்தில் பயிற்சி செய்ததை பார்க்க முடிந்தது. தென்னாபிரிக்க ஒருநாள் தொடருக்கும் இதே முறைதான் பின் தொடர்ந்தார்.
தரமான பயிற்சி:
ஆஸ்திரேலியாவில் தோல்வியடைந்த பிறகு கோலி லண்டனுக்கு சென்றார். ராஞ்சி தொடர் தொடக்கத்திற்கு முன் அங்கு நெட் பயிற்சி செய்தாலும், இங்கிலாந்தில்தான் முழு பயிற்சியும் நடந்தது. இது குறித்து பேசிய அஸ்வின், “அவர் சத்தம் இல்லாத இடத்தில், இந்திய அணியோடு பயணிக்காமல் தனித்து பயிற்சி செய்கிறார்.அதனால் எங்கு பயிற்சி செய்தாலும் நல்ல தரமான பயிற்சி கிடைக்கிறது.”
“விராட் கோலியின் ஆர்வம் தனித்து நின்றது. அவருக்கு இனி யாருக்கும் எதுவும் நிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவர் காட்டிய ஆர்வமும், முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் அற்புதமாக இருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் நிரூபிக்க வேண்டியதில்லை என்றால், விளையாட்டின் மகிழ்ச்சிக்காகவே ஆடுவது முக்கியம்.”
அது தான் முக்கியம்:
“விராட் தானே சொன்னார், முழு மகிழ்ச்சியோடு ஆடினேன்’ என்று. அது மிக முக்கியம். விராட் கோலி முழுக்க முழுக்க ஜோனில் இருந்தார். இந்த போட்டி கிளாசிக் இந்திய ஒருநாள் போட்டி ‘தமாகா’ ஆடுகள உணர்வை தந்தது. தென்னாபிரிக்கா கடைசி ஓவர் வரை ஆடிய போதும் ஆடுகளம் ஒரே மாதிரிதான் இருந்தது. ஒரு பேட்ஸ்மேன் கனவில் கேட்டால் இப்படித்தான் ஆடுகளம் வேண்டும் என்று சொல்லுவான்,” என்று அஸ்வின் பாராட்டினார்.
இதையும் படிங்க: ரோகித் விராட்டுக்கு செக் வைக்க நீங்க யாரு?.. ஒழுங்கா அவங்கள திரும்ப டெஸ்ட்டுக்கு கூப்பிடுங்க – முகமது கைஃப் விமர்சனம்
தென்னாபிரிக்கா 11 ரன்னுக்கு 3 விக்கெட் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட போதும், கீழ் வரிசை வீரர்களான மேத்யூ பிரீட்ஸ்கே, மார்கோ ஜான்சன், கொர்பின் பாஷ் ஆகியோர் அரைசதங்களுடன் சிறப்பாக மீண்டு இந்தியாவுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தினர். இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் மூன்றாம் தேதி ராய்ப்பூரில் நடக்கிறது.






