கம்பீர் அகர்கர் கண்ணாடிய பாருங்க.. பேட்ஸ்மேன்களை வாழ விடுங்க.. இதுதான் வழி – ஹர்பஜன் சிங் அறிவுரை

0
18
Gambhir

தற்போது இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தடுமாறாமல் விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து, இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அதிரடியான அறிவுரையை கூறியிருக்கிறார்.

இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் வெளியில் செல்லும் பொழுது விளையாடும் அளவுக்கு கூட இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சோபிக்க முடியவில்லை. இதற்கான காரணங்கள் குறித்தும் தீர்வுகள் குறித்தும் ஹர்பஜன் சிங் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு பிறகு ஒவ்வொரு கிரிக்கெட் நாடுகளும் தங்களது சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்கு, சொந்த கண்டிஷனுக்கு சாதகமாக ஆடுகளங்களை அமைக்க ஆரம்பித்தன. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகமும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைக்க ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் சுழல் பந்துவீச்சுக்கு அதிக சாதகங்கள் கொடுக்கும் ஆடுகளங்களில் விளையாடி இந்திய பேட்மேன்கள் பெரிய சதங்கள் அடிக்கும் பழக்கத்தை மறந்தார்கள். இதைத்தொடர்ந்து படிப்படியாக 10 ஆண்டுகளுக்கு மேலாக சுழல் பந்துவீச்சில் விளையாடுவதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற ஆரம்பித்து விட்டார்கள். தற்பொழுது இதை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது.

- Advertisement -

கண்ணாடியில் பார்க்க வேண்டிய நிலை

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “நாம் நல்ல கிரிக்கெட் விளையாட நல்ல ஆடுகளங்களில் விளையாட வேண்டும். நாம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல ஆடுகளங்களில் விளையாடவில்லை. இதைப் பார்த்தால் நாம் இந்த இடத்தில்தான் சிக்கிக் கொள்கிறோம். அதுவே நல்ல ஆடுகளத்தில் விளையாடும் போது நம்மை நாமே கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது”

இதையும் படிங்க: இந்தியா தெஆ ODI.. இந்திய வீரர்கள் இல்ல.. எங்க இந்த ஆளு தான் அதிக ரன் எடுப்பார் – டேல் ஸ்டெய்ன் கணிப்பு

“நாம் இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டோம். நான் வெளியில் செல்லும் பொழுது சிறப்பாக செயல்படுவதற்கான ஆடுகளங்கள் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் பேட்ஸ்மேன்களுக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் எப்படி வெற்றி பெற முடியும்? பேட்ஸ்மேன்கள் வாழக்கூடிய ஆடுகளங்கள் தேவை. இதுதான் நாம் நல்ல ஆடுகளங்களுக்கு திரும்புவதற்கான சரியான நேரம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -