தற்போது தென் ஆப்பிரிக்க ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ ஒரு முக்கிய செய்தியை அனுப்பி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருந்தால் கூட இந்திய கிரிக்கெட் வாரியம் வித்தியாசமாக யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அகர்கரின் முந்தைய பேச்சு
இந்திய தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக, அந்தத் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ரன்கள் எடுத்தாலும் அல்லது ரன்கள் எடுக்க வில்லை என்றாலும், அதை வைத்து அவர்கள் 2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள் என்று உறுதிப்படுத்த முடியாது எனச் சொல்லி இருந்தார்.
மேலும் இந்தியாவில் நடைபெறும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனவும், மேலும் அவர்கள் இருவரும் தங்களிடம் அவர்களுடைய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை என்பதையும் சூசகமாகக் கூறியிருந்தார்.
பிசிசிஐ அனுப்பிய செய்தி
இந்த நிலையில் தற்போதைக்கு இருவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த யோகங்களுக்கு இருவரும் மீடியாக்களுக்கு எந்தவித பதிலையும் கொடுக்க வேண்டாம் என பிசிசிஐ விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிடம் கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவடைந்ததும் அகமதாபாத்தில் இருபது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : நான் வெளியே வந்த பின்னாடிதான் இதெல்லாம் நடக்குது.. கம்பீர் டி20ல இத செஞ்சிடாதீங்க – அஸ்வின் கோரிக்கை
ரோகித் சர்மா ஏற்கனவே தான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இருந்த போதிலும் இந்தியத் தேர்வுக்குழு இவர்கள் தொடர்ந்து விளையாடுவதை உறுதி செய்வதை இழுத்தடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடருடன் இது முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.






