இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்து டி20 உலகக் கோப்பை தொடர் வர இருக்கின்ற காரணத்தினால், தலைமை பயிற்சியாளர் கம்பீர் என்ன செய்யக்கூடாது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
தற்போது இந்திய டெஸ்ட் அணி பலவீனமாக இருந்தாலும் இந்திய டி20 அணி பலமானதாக இருக்கிறது. மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்போது டி20 வடிவத்தில் இந்திய அணி உலக சாம்பியனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதைப் பார்க்க விரும்புகிறேன்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இதைச் சொல்லும் பொழுது நான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் இந்திய டி20 கிரிக்கெட்டில் கம்பீர் தாக்கத்தைச் செலுத்தி இருக்கிறார் என்று கூறுவேன். அவர் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளை செய்து கொண்டே இருந்தார். அவரது இந்த முயற்சி விவாதங்களுக்கும் உள்ளாகி இருந்தது”
” டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாட இருக்கும் 10 டி20 போட்டிகள், இந்த அணி எவ்வளவு மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கும். பேட்டிங் வரிசையில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில், நான் இன்னும் உறுதித் தன்மையை பார்க்க விரும்புகிறேன். அதிகப்படியான மாற்றங்கள் தேவையில்லை”
நான் விரும்பியது நடக்கிறது
“வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பயிற்சியாளராக கம்பீர் முத்திரை பதித்து விட்டார் என்று நினைக்கிறேன். இதற்கான பெருமை ஐபிஎல் தொடருக்கு சேரும். இது பல வகைகளில் மிகத் திறமையான வெள்ளைப் பந்து வீரர்களை இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்து வருகிறது. குறிப்பாக அபிஷேக் சர்மா மாதிரியான ஒரு வீரர் கிடைத்திருக்கிறார். டி20 உலகக்கோப்பையில் அவருடைய பார்ம் இந்தியா எங்கு செல்கிறது என்பதை தீர்மானிக்கும்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : நீங்க நல்ல பிட்ச்சை பார்க்கிறதே இல்லையே ராஜா.. இதை செய்யாதவரை உங்களுக்கு தீர்வு இல்ல – கபில்தேவ் விமர்சனம்
“ஒரு காலத்தில் டி20 வடிவத்தில் இந்திய அணிக்காக நான் விளையாடினேன். பேட்ஸ்மேன்கள் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இதெல்லாம் நீங்கள் விளையாடும் போது நடக்காது. நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு தான் நடக்கிறது. இந்த வகையிலும் எனக்கு மகிழ்ச்சிதான்” என்று கூறி இருக்கிறார்.






