நம்மள பாத்து பயந்து கிடந்த எதிரணிகள்.. இப்போ எதிர்த்து விளையாட உற்சாகமா இருக்காங்க – தினேஷ் கார்த்திக் வேதனை

0
48

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலும் வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது. தென்னாபிரிக்க கிரிக்கெட்டுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், தற்போதைய இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சில கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவில் டெஸ்ட் தொடர் என்றாலே இந்திய அணியின் ஆதிக்கம், பல ஆண்டுகளாக இருந்து வந்தது. எம்எஸ் தோனி கேப்டன் ஆனது முதல் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை கட்டி ஆண்ட ஒரு சிறப்புமிக்க கேப்டன் ஆக திகழ்ந்தார். அதற்குப் பிறகு ரோகித் சர்மாவும் சில ஆண்டுகளாக கேப்டன் பதவி வகிக்க அவரது தலைமையிலும் இந்திய அணி சொந்த மண்ணில் பல வெற்றிகள் பெற்றது.

இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து, நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டியிலும் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி அதற்குப் பிறகு தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரிலும் தோல்வியடைந்து தொடரை முழுவதுமாக இழந்திருக்கிறது. பல வருடங்களாக சொந்த மண்ணில் கட்டிக் காத்த இந்திய அணியின் பெருமை தற்போது சுக்குநூறாக உடைந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் போது “இந்திய மண்ணில் வந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றாலே எதிரணிகள் பயப்படுவார்கள். ஆனால் இப்போது இந்திய அணியுடன் விளையாட வேண்டும் என்றால் உற்சாகமாக இருக்கிறார்கள். தற்போதைய நிகழ்வு எப்படி இருக்கிறது என்றால் கடந்த 12 மாதங்களில் இந்திய அணி இரண்டு முறை ஒயிட் வாஸ் ஆகி தோல்வி அடைந்திருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு மோசமான காலமாக மாறி உள்ளது.

இதையும் படிங்க:தப்பிக்க பாக்காதீங்க கம்பீர்.. நீங்க முன்னாடி பேசுனது உலகம் பூரா தெரியும்.. மறைக்காதீங்க – ஸ்ரீகாந்த் பேட்டி

உடனடியாக முடிவுகளை எடுக்கவில்லை என்றால் இது மேலும் பல சிக்கல்களை உண்டாக்கி விடும்” என்று தினேஷ் கார்த்திக் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்னும் ஒன்பது மாத காலம் இந்திய அணிக்கு எந்த டெஸ்ட் போட்டிகளும் இல்லை என்பதால் தற்போதைக்கு இந்திய டெஸ்ட் அணிக்கு பெரிய தலைவலி எதுவும் இல்லை. இருப்பினும் இது குறித்த மாற்றங்களை எடுக்கவில்லை என்றால் தினேஷ் கார்த்திக் கூறியது போல நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பது தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படும் தகவலாகும்.

- Advertisement -