கவுகாத்தி டெஸ்டில் தென்னாபிரிக்காவிடம் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த வெற்றியால் தென்னாபிரிக்கா 2-0 என்று தொடரை ஒயிட்வாஷ் செய்தது.
தோல்விக்குப் பிறகு பேசிய ஹர்பஜன், “இந்திய கிரிக்கெட்டின் முந்தைய தலைமுறை பெரிய வீரர்களாக ஆனதற்கு காரணம், அவர்கள் ஐந்து நாள் போட்டிகளை எப்படி ஆட வேண்டும் என்பதைத் தெரிந்து வைத்திருந்தார்கள். டி20 யாராலும் ஆட முடியும். டி20 வீரரால் டெஸ்ட் கிரிக்கெட் ஆட முடியாது.”
டி20 வீரர்களால் டெஸ்ட் ஆட முடியாது:
“யாருக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் உண்மை இதுதான். தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்டை 408 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. தோற்பது வெல்வது எல்லாம் நடக்கும். ஆனால் நல்ல டெஸ்ட் பிட்ச்களில் ஆடத் தொடங்குவோம். அங்கு கடின உழைப்பு தேவைப்படும்.”
“இங்கிலாந்தில் ஐந்தாவது நாளில் நாம் வென்ற போது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. சிராஜும் மற்ற பேஸ் பவுலர்களும் அந்த வெற்றிக்காக அப்படி பந்துவீசினார்கள் அதுதான் உண்மையான கிரிக்கெட். கடின உழைப்பு தேவை. சிராஜையோ கில்லையோ கேட்டால், அந்த வெற்றி தங்கள் கேரியருக்கு எவ்வளவு உதவியது என்று சொல்வார்கள்.”
நல்ல பிட்சில் விளையாடுங்க:
” நல்ல பிட்ச்களில் நம் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடித்தார்கள். பவுலர்கள் விக்கெட்டுகள் எடுத்தார்கள்.முன்பு என்ன நடந்தது? இந்தியாவில் நம் பவுலர்கள் நிறைய விக்கெட்டுகள் எடுப்பார்கள். அதே பெரிய பவுலர்கள் வெளிநாட்டுத் தொடர்களுக்குச் சென்றதும் ஓரமாக உட்கார வைக்கப்படுவார்கள்.”
300, 400 விக்கெட்டுகள் எடுத்த எந்த மாமனிதரும் வெளியே உட்கார்ந்ததை நான் பார்த்ததில்லை. ஆனால் இது திரும்பத் திரும்ப நடந்து கொண்டே இருந்தது. இந்தியாவில் போட்டி வந்ததும் எல்லோரும் ‘நான் ரெடி, நான் ரெடி’ என்று ஆயத்தமாகிவிடுவார்கள். இப்படி நடக்காது ப்ரா.”
இதையும் படிங்க: இந்திய டெஸ்ட் அணியில் இவ்வளவு ஆல் ரவுண்டர் எதுக்குங்க? நிதிஷ் என்ன கிழிச்சாரு.. கம்பீரை வெளுத்த முன்னாள் சிஎஸ்கே வீரர்
“சரியான எதிர்காலத்துக்கு வழி வேண்டுமானால், இந்தியா நல்ல பிட்ச்களில் ஆட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நல்ல பழக்கங்கள் வர வேண்டுமானால், நல்ல பிட்ச்களில் ஆடுவது மிக முக்கியம். ரஞ்சி டிராபியை 9 மி.மீ புல்வெளியில் ஆடுவீர்கள், டெஸ்ட் போட்டியை முழுக்க முழுக்க மண் பிட்ச்சில் ஆடுவீர்கள்.முதல் பந்திலிருந்தே திரும்பும். ” என்று ஹர்பஜன் கூறினார்.






