நாங்க டிக்ளர் லேட் பண்ண காரணம் இதுதான்.. கே எல் ராகுல் அவுட் ஆனத பார்த்தீங்கதானே – ஸ்டப்ஸ் பேட்டி

0
32
Stubbs

இன்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில் தென் ஆப்பிரிக்க அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளர் செய்வதற்கு தாமதம் செய்தது. இதற்கான காரணம் குறித்து அந்த அணியின் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பேசியிருக்கிறார்.

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்து 549 ரன்கள் இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா நிதானம்

தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை அதிரடியாக விளையாடி இந்திய அணியை அதிக ஓவர்கள் விளையாட வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக தென் ஆப்பிரிக்கா மிகவும் மெதுவாக விளையாடியது.

மேலும் முதல் இரண்டு செஷன் விளையாடி, மேலும் மூன்றாவது ஸ்டேஷனில் முக்கால் மணி நேரம் தொடர்ந்து விளையாடியது. அவர்கள் ஏன் இவ்வளவு தாமதமாக இந்திய அணியை விளையாட வைக்கிறார்கள் என்ற குழப்பம் உருவானது. அதிக ஓவர்கள் இந்திய அணியை விளையாட வைத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுதான் காரணம்?

இதுகுறித்து பேசி இருக்கும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ” நாங்கள் டிக்ளர் செய்வது தாமதமானது வருத்தமாக இருப்பது போல இருந்தது. ஆனால் இப்படி தற்போது இரண்டு விக்கெட்டுகளை இழந்திருப்பது மகிழ்ச்சியிருக்கிறது. எங்களுடைய டிக்ளர் படிவு எத்தனை ஓவர்கள் என்பது கிடையாது. இத்தனை மணிக்கு செய்ய வேண்டும் என்றுதான் முடிவு செய்திருந்தோம். எனவே நாங்கள் மூன்றாவது செஷனில் தொடர்ந்து 40 நிமிடங்கள் விளையாட முடிவு செய்தோம். அந்த நேரத்தில் எனக்கு ஜடேஜாவிடம் கடைசி ஓவர் இருந்தது. அதனால் சதம் அடிக்க பார்த்தேன் ஆனால் முடியவில்லை”

இதையும் படிங்க : 549 ரன்.. இரக்கம் காட்டாத தென் ஆப்பிரிக்கா.. இந்திய அணி டிரா செய்ய முடியுமா?.. 5வது நாளில் ஆச்சரியங்கள்

“இந்த ஆடுகளத்தில் பவுலர்களின் கால் தடம் இருக்கும் இடத்தில் பந்து பட்டால் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். எனவே இந்திய பவுலர்களை அங்கு தொடர்ந்து பந்து வீச விடக் கூடாது என்றுதான் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடினேன். இந்த ஷாட் கூட அந்த நேரத்தில் தற்காப்பு ஆட்டம் போலத்தான். நீங்கள் எங்களுடைய ஆர்மிஷன் கேஎல்.ராகுல் விக்கெட்டை எடுத்த விதத்தை பார்த்தால் இதை புரிந்து கொள்ள முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -