இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆசஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெல்ல வைத்தது குறித்து டிராவிஸ் ஹெட் பேட்டி அளித்திருக்கிறார்.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற பெர்த் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. இந்த நிலையில் இங்கிலாந்து நிர்ணயித்த 205 ரன்கள் டார்கெட்டில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 69 பந்தில் 123 ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி சாதாரணமாக இந்த போட்டியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டிராவிஸ் ஹெட் முதல் முறை
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் டிராவிஸ் ஹெட் முதல் முறையாக துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். உஸ்மான் கவஜா இரண்டு இன்னிங்ஸிலும் முதுகுப் பிடிப்பு காரணமாக துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கவில்லை. முதலில் லபுசேன் துவக்காட்டக்காரராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் மொத்தமாக 10 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். நான்காவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய சதம் அடித்து அணியை ஹெட் வெற்றி பெற வைத்த போதும் கூட, ஆட்ட நாயகன் விருது ஸ்டார்க்குக்கு கொடுக்கப்பட்டது.
திட்டம் யாருடையது
இதுகுறித்து ஹெட் பேசும் பொழுது “மிட்சல் ஸ்டார் செயல்பாட்டுக்கு பக்கத்தில் கூட என்னுடைய சதம் கிடையாது. அவர்தான் இந்த போட்டியில் எங்களை வழிநடத்திக் கொண்டு வந்தார். உண்மையாக இந்த போட்டியில் நான் துவக்க இடத்தில் வருவேன் சதம் அடிப்பேன் என்று நினைக்கவே கிடையாது. எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து நான் சதம் அடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்”
இதையும் படிங்க : நாங்க கிரீஸில் நிம்மதியா இருந்தோம்.. ஆனா எந்த பிரயோஜனமும் இல்லை.. இந்தியா அசத்திட்டாங்க – ஸ்டப்ஸ் வருத்தம்
“என்னை ஓபனிங் அனுப்புவது தொடர்பான முடிவை ஸ்மித் கம்மின்ஸ் மற்றும் பயிற்சியாளர் ஆன்ட்ரூ டொனால்ட் மூவருமேதான் சேர்ந்து எடுத்தார்கள். இந்த மைதானத்தில் எனக்கு ஏற்கனவே இரண்டு சதங்கள் தவறி இருந்தது. இந்த முறை சதம் அடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஆசஸ் தொடரில் கிடைத்த வெற்றி என்பதால் நாங்கள் நிச்சயம் கொண்டாடுவோம். அடுத்து பிரிஸ்பேன் டெஸ்ட்டை எதிர்நோக்கி இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.






