இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் ருத்ரதாண்டவத்தில் ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்கள் எடுத்தது. ஹாரி புரூக் 52 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஸ்டார்க் 7 விக்கெட் வீழ்த்தினார்.
கொட்டிய விக்கெட்
இதைத்தொடர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26 ரன்கள் எடுத்தார். மேலும் இங்கிலாந்து பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி, வழக்கம்போல அதிரடியாக விளையாட முயற்சி செய்து ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி 164 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. போலன்ட் நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால் ஆஸ்திரேலியா தோற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
போட்டியை மாற்றிய ஹெட்
இதைத் தொடர்ந்து இந்த முறை துவக்க ஆட்டக்காரராக வந்த டிராவிஸ் ஹெட் பேட்டிங்கில் ருத்ர தாண்டவம் ஆடினார். சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 36 பந்தில் அரை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்தார். இறுதியாக 83 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 123 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை உறுதி செய்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : 2 விக்கெட்.. தென் ஆப்பிரிக்கா நங்கூரம்.. ஆனாலும் போட்டி இந்தியா கையில்.. எப்படி சாத்தியமானது?
இன்னொரு பக்கத்தில் தொடக்க ஆட்டக்கார வெதரால்ட் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, மார்னஸ் லபுசேன் இறுதிவரை களத்தில் நின்று அதிரடியாக 49 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா அணி 28.2 ஓவரில் 25 ரன்கள் இலக்கை இரண்டு விக்கெட் இழப்புக்கு எட்டி எட்டு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து வழக்கம் போல் அதிரடியாக விளையாடுகிறேன் என போட்டியை கோட்டைவிட்டு இருக்கிறது.






