தற்போது ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணி 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
இந்த முறை ஆசஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. நேற்று பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டவிக்கெட்டுகள் கொட்டிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக போட்டி வேகமாக நகர்ந்து வந்திருக்கிறது.
முதல் இன்னிங்ஸ் நிலவரம்
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு ஒல்லி போப் 46, ஹாரி புரூக் 52 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 172 மட்டும் எடுத்து சுருண்டது. ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க் ஏழு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு அலெக்ஸ் கேரி 26 ரன், கேமரூன் கிரீன் 24 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியா அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இங்கிலாந்து பந்துவீச்சில் கேப்டன் ஸ்டோக்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இங்கிலாந்து அணிக்கு 40 ரன்கள் முன்னிலை கிடைத்தது.
காப்பாற்றிய பவுலர்கள்
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு மீண்டும் விக்கெட் சரிவு ஏற்பட்டது. பேட்டிங் மேல் வரிசையில் பென் டக்கெட் 28 ரன், ஒல்லி போப் 33 ரன்கள் எடுத்தார்கள். மற்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் யாரும் பெரிய ரன்கள் எடுக்கவில்லை.
இதையும் படிங்க : ஆஸி மண்ணில் ஜோ ரூட் மோசமான சாதனை.. இந்திய வீரரை பின்னுக்கு தள்ளி சோகம்.. கலக்கும் பவுலர்கள்
இந்த நிலையில் இங்கிலாந்து பவுலர்கள் அட்கின்சன் 32 பந்தில் 37 ரன், பிரைடன் கார்ஸ் 20 பந்தில் 20 ரன் எடுத்தார்கள். இந்த ஜோடி இறுதியாக அரை சதம் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் காரணமாக இங்கிலாந்து தட்டு தடுமாறி 164 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்காட் போலன்ட் நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் ஆஸ்திரேலியா கடுமையாக வெற்றிக்கு போராட வேண்டி இருக்கும்.






