IND vs SA நாளை 2வது டெஸ்ட்டில்.. முதல் முறையாக நடக்கப் போகும் வரலாற்று மாற்றம் – முக்கிய தகவல்

0
236
ICT

இந்திய தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நாளை அசாம் கவுகாத்தி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. இந்த போட்டியில் முக்கியமான ஒரு சம்பவம் நடைபெற இருக்கிறது.

இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 124 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. தற்பொழுது இந்தியாவில் வைத்து இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வரலாற்று முயற்சியில் தென் ஆப்பிரிக்க அணி இறங்க இருக்கிறது.

- Advertisement -

இன்னொரு நியூசிலாந்து தொடரா?

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்லாமல் மூன்றையும் தோற்று வரலாற்று படுதோல்வி அடைந்தது. இதுவரையில் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்றது கிடையாது என்ற வரலாறு மாறியது.

இந்த நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தோற்று இருக்கிறது. நாளை துவங்கும் இரண்டாவது போட்டியை தோற்றால் இந்திய அணிக்கு மேலும் ஒரு வரலாற்று தோல்வி பதிவாகும். அதே சமயத்தில் அசாம் கவுகாத்தி ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு முதல் இரண்டு மூன்று நாட்கள் சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

முதல் வரலாற்று சம்பவம்

இந்த போட்டி நடைபெறும் அசாம் கவுகாத்தி மைதானம் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியாவின் கிழக்கு பகுதியில் சூரிய அஸ்தமனம் மிகவும் வேகமாக நடக்கும். எனவே இந்த போட்டி காலை 9:30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு துவங்குகிறது.

மேலும் மிக முக்கியமாக, பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் செஷன் முடிவடைந்ததும் மதிய உணவு இடைவேளையும், இரண்டாவது செஷன் முடிவடைந்ததும் தேநீர் இடைவேளையும் கொடுக்கப்படும். ஆனால் இங்கு சூரிய அஸ்தமனம் சீக்கிரத்தில் நடைபெறும் என்பதால், போட்டி 9 மணிக்கே துவங்கும்.

இதையும் படிங்க : இங்கி ஆஸி முதல் டெஸ்ட்.. 19 விக்கெட்.. எங்களை குறை சொன்ன வாய்கள் எங்கே போச்சு? – அஸ்வின் விமர்சனம்

காலை 11:00 மணிக்கு முதல் செஷன் முடிந்ததும் மதிய உணவு இடைவேளைக்கு பதிலாக தேநீர் இடைவேளை விடப்படும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து 11:20 முதல் 1:20 மணி வரையில் இரண்டாவது செஷன் நடைபெற்று மதிய உணவு இடைவேளை விடப்படும். அடுத்து இரண்டு மணி நேரம் போட்டி நடைபெற்று ஒரு நாள் முடிவுக்கு வரும். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -