தற்போது இந்திய டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கம்peeரை நீக்க வேண்டுமா என்பது குறித்தும், மேலும் இந்திய அணி வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் கங்குலி அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய அணி சொந்த மண்ணில் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், வலிமை குறைந்த அனுபவமற்ற தென் ஆப்பிரிக்க அணியிடம், 124 ரன்கள் துரத்த முடியாமல் தோல்வியடைந்தது பெரிய விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
கம்பீரை நீக்க வேண்டுமா?
இது குறித்து பேசி உள்ள கங்குலி கூறும் பொழுது “தற்போது ஏற்பட்டுள்ள தோல்விக்கு கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது தேவையில்லாதது. ஆனால் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இப்பொழுது அவர்கள் ஒரு அணியாக ஒன்றிணைந்து விளையாட வேண்டும். ஏனென்றால் தட்டையான ஆடுகளங்களில் வெற்றிக்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்”
” இந்தியாவில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் போட்டி எவ்வளவு விரைவாக மாறும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். நீங்கள் தட்டையான பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை அமைத்தால், அதில் வெற்றி பெறுவதற்கும் மிகவும் கடுமையாக உழைத்து பொறுமையாக இருக்க வேண்டும். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இதை கம்பீர் மற்றும் கில் இருவரும் மிக சரியாக செய்தார்கள்”
இந்திய அணியால் முடியும்
“இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 5 நாட்களும் நீண்ட போட்டியில் 20 விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்களால் கைப்பற்ற முடிந்தது. இதைத்தொடர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களால் செய்ய முடியும். எனவே பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் விளையாடி ரன்கள் குவித்து, பந்து வீச்சாளர்களை விக்கெட் எடுக்க அனுமதிக்க வேண்டும்”
இதையும் படிங்க : வேற எந்த ஐபிஎல் டீம் ஜெர்சிக்கும் அந்த பவர் இல்ல.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டதும் அது வந்துச்சு – சஞ்சு சாம்சன் பேச்சு
“இதுபோல இந்திய பேட்டிங் வரிசையையும் பார்க்க வேண்டும். மூன்றாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் தேவையா என்று சிந்திக்க வேண்டும். ஏனென்றால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு நிலையாக விளையாடும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் தேவை” என்று கூறியிருக்கிறார்.






