வேற எந்த ஐபிஎல் டீம் ஜெர்சிக்கும் அந்த பவர் இல்ல.. சிஎஸ்கே ஜெர்சியை போட்டதும் அது வந்துச்சு – சஞ்சு சாம்சன் பேச்சு

0
30
Sanju

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து டிரேடிங் மூலம் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ள சஞ்சு சாம்சன், சிஎஸ்கே ஜெர்சியை அணிந்ததும் தான் எப்படி உணர்ந்தேன்? எனக் கூறியிருக்கிறார்.

சிஎஸ்கே அணி கடந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில் வீரர்களை சரியான முறையில் வாங்காத காரணத்தினால் பெரிய பாதிப்புக்கு உள்ளானது. இதன் காரணத்தால் ஒட்டுமொத்த அணியையும் மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில் இந்த மாற்றத்தின் முதல் படியாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்துவிட்டு, சஞ்சு சாம்சனை வாங்கிக் கொண்டது.

- Advertisement -

ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் விளக்கம்

இந்த நிலையில் தங்களுடைய அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், தொடக்க வீரராகவும் பல வழிகளில் பங்களிப்பை கொடுத்து மிகவும் முக்கியமான வீரராக இருந்த சஞ்சு சாம்சனை ஏன் டிரேடிங் செய்தோம் என்பது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் மனம் திறந்து பேசி இருந்தார்.

அதில் அவர் கூறும் போது சஞ்சு சாம்சன் தங்களிடம் உணர்வு ரீதியாக மிகவும் களைப்பாக இருப்பதாகவும், தனக்கு ஒரு மாற்றம் தேவைப்படுவதாகவும் தெரிவித்திருந்தார், நாங்கள் அவர் இதை கேட்கும் பொழுது செய்ய வேண்டிய இடத்தில் இருந்தோம், அதே சமயத்தில் நாங்கள் அவரை டிரேடிங் மூலமாக மட்டுமே வெளியே அனுப்புவோம் என்றும் கூறியிருந்தோம், ஏனென்றால் அப்பொழுதுதான் எங்கள் அணியையும் பலப்படுத்த முடியும் என்று தெரிவித்திருந்தார்.

- Advertisement -

சிஎஸ்கே ஜெர்சி தந்த பவர்

இந்த நிலையில் சிஎஸ்கே ஜெர்சி அணிந்ததை குறித்து சஞ்சு சாம்சன் பேசும் பொழுது “நான் சிஎஸ்கே ஜெர்சியை அணியும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தேன். இந்த ஜெர்சியை அணிவது எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒன்று. நான் ஏற்கனவே சொன்னது போல இதற்கு முன்பாக கருப்பு மற்றும் நீலம் என அடர் வண்ணத்தில் ஜெர்சியை அணிந்து வந்தேன். தற்போது மஞ்சள் நிறத்தில் அணிந்தது ஒரு நல்ல உணர்வாக இருந்தது”

இதையும் படிங்க : விராட் ரோஹித் அத காப்பாத்த நினைச்சாங்க.. இப்ப கம்பீர் மொத்தமா முடிச்சுட்டு கதை சொல்றாரு – மனோஜ் திவாரி விமர்சனம்

“சிஎஸ்கே ஜெர்சியை அணிந்ததும் இப்படி ஒரு உணர்வு வரும் என நான் நினைக்கவே இல்லை. நான் ரொம்ப பாசிட்டிவ் ஆகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். மேலும் இதை அணிந்ததும் ஒரு சக்தி கிடைத்தது போலவும் என்னை சாம்பியனாகவும் உணர்ந்தது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -