ரோகித் சர்மாவின் நம்பர் 1 இடம் காலி..  முன்னாள் சிஎஸ்கே வீரர் ஐசிசி தரவரிசையில் புதிய நம். 1

0
45

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற பெருமை முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்து மற்றும் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ்  ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் இப்போது முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

இதன் மூலம் 1979-ல் க்ளென் டர்னருக்குப் பிறகு ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெற்ற இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை மிட்செல் பெற்றுள்ளார். அதிரடி பேட்ஸ்மேனான இவர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் தனது 7-வது ஒருநாள் சதத்தை 118 பந்துகளில் 119 ரன் பதிவு செய்தார்.

- Advertisement -

டேரல் மிட்செல் முதலிடம்:

இந்த அபார சதத்தால் நியூசிலாந்து அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதுவே ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி மிட்செல்லை முதலிடத்திற்கு கொண்டு சென்றது. 34 வயதான மிட்செல் தனது கேரியரில் முதல் முறையாக ஒருநாள் தரவரிசையில் நம்பர்-1 ஆகியுள்ளார்.

மார்ட்டின் க்ரோ, ராஸ் டெய்லர், ஆண்ட்ரூ ஜோன்ஸ், ரோஜர் ட்வோஸ், நாதன் ஆஸ்டில், கேன் வில்லியம்சன், மார்ட்டின் கப்தில் போன்ற நியூசிலாந்து நட்சத்திரங்கள் ஒருநாள் தரவரிசையில் டாப்-5 இடங்களில் இருந்துள்ளனர். ஆனால் முதலிடம் என்பது இதுவரை க்ளென் டர்னர்  மற்றும் இப்போது டேரில் மிட்செல் மட்டுமே பிடித்த பெருமை பெற்றுள்ளனர்.

- Advertisement -

ரோகித்துக்கு மீண்டும் வாய்ப்பு:

இருப்பினும், கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டிகளில் மிட்செல் ஆட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரோஹித் சர்மாவுக்கு மீண்டும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை மீட்டெடுக்க சிறந்த வாய்ப்பு காத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30-ல் இந்தியாவில் தொடங்குகிறது.

இதையும் படிங்க: நியூசிலாந்து வெஸ்ட்இண்டீஸ் 2வது ஒருநாள்.. ஷாய் ஹோப் அபார சதம்! தொடரை வென்ற பிளாக் கேப்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் 202 ரன் குவித்து பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதை வென்ற ரோஹித், முதல் ஒருநாளில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், அடுத்த இரு போட்டிகளில் 73 மற்றும் 121 ரன்கள் விளாசினார்.தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் அதிரடி காட்டி 2027 உலகக்கோப்பை வரை தனது இடத்தை உறுதி செய்ய ரோஹித் தீவிரமாக உள்ளார். இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகள் வரும் நவம்பர் 22-ல் கவுகாத்தியில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன.

- Advertisement -