நடப்பு ரஞ்சி சீசனில் தமிழ்நாட்டு அணிக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் தனி ஆளாக நின்று போராடி சதம் அடித்து உத்தர பிரதேஷ் அணியை முன்னிலை பெற வைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாட்டு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தமிழ்நாட்டு அணிக்கு பாபா இந்திரஜித் 188 பந்துகளில் 149 ரன்கள், ஆன்ட்ரே சித்தார்த் 205 பந்துகளில் 121 ரன்கள், அஜீடேஷ் குருசாமி 153 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார்கள். தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்தது.
உத்தர பிரதேஷ் விக்கெட் சரிவு
முதலில் பேட்டிங் செய்ய வந்த உத்தர பிரதேஷ் அணிக்கு மேல் வரிசையில் கோஸ்வாமி 172 பந்துகளில் 79 ரன்கள், ஆரியன் ஜுரல் 127 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்கள். இதைத் தொடர்ந்து கேப்டன் கரன் சர்மா 11, ஆரத்தியா யாதவ் 4 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.
உத்தர பிரதேஷ் அணி ஒரு கட்டத்தில் 191 ரன்கள் எடுத்து முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது. களத்தில் ரிங்கு சிங் இருந்தார். மேலும் இதைத் தொடர்ந்து வேத பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிவம் மாவி விளையாட வந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி 131 பந்துகளில் 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிவம் மாவி 64 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார்.
ரிங்கு சிங் அபாரம்
இதற்கடுத்து அந்த கார்த்திக் யாதவை வைத்துக்கொண்டு ரிங்கு சிங் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். தொடர்ந்து அக்யூப் கான் உடன் இணைந்து 36 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இறுதியாக உத்தர பிரதேஷ் அணி 443 ரன்கள் எடுத்திருந்த பொழுது ரிங்கு சிங் 247 பந்துகளில் 17 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 176 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே ராஜா ஜடேஜா.. ராஜஸ்தான்ல பெருசா எதுவும் பண்ண முடியாது.. காரணம் இதுதான் – முகமது கைஃப் விளக்கம்
இறுதியாக உத்தரப்பிரதேச அணி முன்னிலை பெற கடைசி விக்கெட்டுக்கு எட்டு ரன்கள் தேவைப்பட்டது. உத்தர பிரதேஷ் கடைசி விக்கெட் ஜோடி 17 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க 460 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த போட்டி ட்ராவில் முடிவடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றதால் தமிழ்நாட்டு அணியை விட இரண்டு புள்ளிகள் கூடுதலாக உத்தரபிரதேச அணிக்கு மூன்று புள்ளிகள் வழங்கப்படும்.






