இது உங்களுக்கு தேவையா பாஸ்? பாபர் அசாம்க்கு ஐசிசி அபராதம்.. கோபத்தில் செய்த குற்றத்திற்காக தண்டனை..

0
49

ஐசிசி பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாமுக்கு அபராதம் விதித்துள்ளது. இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ராவல்பிண்டியில் நடந்த ஆட்டத்தில் வீரர்கள் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது. .ஐசிசி வீரர்கள் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ஐ மீறியதற்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துமீறிய பாபர் அசாம்:

இது “சர்வதேச போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள், உடைகள், மைதான உபகரணங்கள் முக்கிய பொருட்களை தவறாகப் பயன்படுத்துதல்” தொடர்பானது ஆகும். இதனால் பாபர் அசாம்க்கு ஒரு டிமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான பாபருக்கு இது முதல் குற்றமாகும்.

- Advertisement -

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆட்டமிழந்த பிறகு பேட்டால் ஸ்டம்ப்பை அடித்ததற்காக பாபர் ஆசாம் அபராதம் விதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் பாகிஸ்தான் 212 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திக் கொண்டிருந்த 21-வது ஓவரில் நடந்தது. ஜெஃப்ரி வாண்டர்சே பாபரை 34 ரன்களில் போல்டாக்கினார். இதனால் கோபமடைந்த பாபர் அசாம், கிரீஸை விட்டு வெளியேறுவதற்கு முன் தனது பேட்டால் ஸ்டம்ப்பை அடித்தார்.

ஐசிசி நடவடிக்கை:

அதனால் ஐசிசி அவரை நடத்தை விதி மீறலுக்கு குற்றவாளியாகக் கண்டறிந்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐசிசி, “மைதான அம்பயர்கள் அலெக்ஸ் வார்ஃப் மற்றும் ரஷீத் ரியாஸ், மூன்றாவது அம்பயர் ஷர்ஃபுதௌலா இப்னே ஷாஹித், நான்காவது அம்பயர் பைசல் ஆப்ரிடி ஆகியோர் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர். ஐசிசி சர்வதேச பேனல் மேட்ச் ரெஃபரியான அலி நக்வி தண்டனையை பரிந்துரைத்தார்.”

- Advertisement -

இதையும் படிங்க: 93-7 விக்கெட் எடுத்த போது இந்திய ஊடகங்கள் போட்டி முடிந்ததாக நினைத்தனர்.. ஆனால் கொஞ்சம் கூட நம்பிக்கையை இழக்கவில்லை..

“பாகிஸ்தான் பேட்ஸ்மேன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை தேவைப்படவில்லை” என்று ஐசிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், பாபர் ஆசாமுக்கு இது மறக்க முடியாத தொடராக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட சதக்குறைக்குப் பிறகு அவர் ஒரு அற்புதமான ஆட்டத்தில் சதம் அடித்தார்.

இரண்டாவது போட்டியில் 83 இன்னிங்ஸ்க்கு பிறகு தனது 20-வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். அதன் மூலம் 289 ரன்களை வெற்றிகரமாக துரத்தி தொடரையும் கைப்பற்ற உதவினார். தற்போது பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு தொடர் இன்று நடைபெறுகிறது.

- Advertisement -