ஐபிஎல் மினி ஏலத்துல மும்பைக்கு.. நல்ல இன்டர்நெட் கனெக்சன் வேணும்.. காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
42
Hardik

இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு என்ன தேவையாக இருக்கும் என்பது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இந்த ஆண்டு இறுதியில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி மட்டுமே எந்தவித அழுத்தமும் இல்லாமல் ஏற்கனவே தயாராகிவிட்ட அணியாக இருக்கிறது. தற்போது அவர்களிடம் 2.75 கோடி ரூபாய் மட்டுமே பணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நல்ல இன்டர்நெட் கனெக்சன் தேவை

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “மும்பைக்கு முதலில் என்ன தேவை என்பதை விட அவர்களிடம் மிகவும் குறைவான பணம் மட்டுமே இருக்கிறது என்பது முக்கியமானது. ஏலம் நடைபெறும் நாளில் அங்கு அவர்களுக்கு நல்ல இன்டர்நெட் கனெக்சன் தேவை. அவர்கள் நல்ல பிளேலிஸ்ட்டை உருவாக்கி, மேலும் நண்பர்களுடன் உட்கார்ந்து சாட்டிங் செய்து கொண்டிருக்கலாம்”

“அதன் பிறகு அவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்கள் பார்க்கலாம். அவர்களுக்கு இந்த மூன்று நான்கு விஷயங்கள் மட்டுமே இனி ஏலத்தில் தேவைப்படும். அவர்களுக்கு நல்ல சாப்பாடு, நல்ல தண்ணீர், நல்ல காபி போன்றவை மட்டுமே போதுமானது. ஏனென்றால் மும்பைக்கு எதுவுமே தேவையில்லை அவர்கள் ஏற்கனவே தயாராக இருக்கிறார்கள்”

- Advertisement -

தேவையான இரண்டு வீரர்கள் வந்து விட்டார்கள்

“மும்பை அணிக்கு கீழ் வரிசையில் விளையாடக்கூடிய ஒரு நல்ல பேட்ஸ்மேன் தேவையாக இருந்தார். இந்த நிலையில் அவர்கள் ரூதர்போர்ட் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அழகாக டிரேடிங் செய்து விட்டார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு துவக்க ஜோடி தேவை என்றால் கூட ரியான் ரிக்கல்டன் உடன் வில் ஜாக்சை அனுப்பிவிடுவார்கள்”

இதையும் படிங்க : நம்ப இந்திய பையன் இருக்கார்.. சிஎஸ்கே அவரை வாங்கினால் வேற மாதிரி இருக்கும் – கைப் நம்பிக்கை

” மேலும் அவர்களுக்கு தீபக் சகர் அடிக்கடி காயம் அடைகின்ற காரணத்தினால், ஒரு மாற்று இந்திய பவுலர் தேவையாக இருந்தது என்று பேசிக் கொண்டார்கள். திடீரென்று பார்த்தால் அந்த இடத்திற்கு சர்துல் தாக்கூர் வந்துவிட்டார். அதுவும் இந்த பால்கர் எக்ஸ்பிரஸ் வெறும் 2 கோடி ரூபாய்க்கு கிடைத்துவிட்டது. அவருக்கு இங்குள்ள நிலைமைகள் மிகவும் நன்றாகவே தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -