தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய நட்சத்திர வீரர்கள் சுப்பன் கில் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் மெகா சாதனைகளை படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கிறது.
தற்போது இந்தியா வந்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலாவதாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
ரிஷப் பண்டின் ஷேவாக் சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் காயம் அடைந்த இந்திய நட்சத்திர விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு மீண்டும் திரும்பி வந்திருக்கிறார்.
தற்போது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் 91 சிக்ஸர்கள் எடுத்து அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருக்கிறார். தற்போது ரிஷப் பண்ட் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இன்னும் இரண்டு சித்தர்கள் அடித்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரராக மாறுவார்.
கில்லுக்கு காத்திருக்கும் மெகா சாதனைகள்
இந்திய கேப்டன் சுப்மன் கில் இன்னும் ஒரு டெஸ்ட் சதம் அடித்தால், ஒரு கிரிக்கெட் ஆண்டில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த இந்திய வீரராக சாதனை படைப்பார். இந்த ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நான்கு மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒன்று என மொத்தம் ஐந்து சதங்கள் அடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க : சூரியகுமார் என்கிட்ட கேட்ட அதை செஞ்சு தரேன்.. ஹோம் ஒர்க் செஞ்சு எடுத்துட்டு வரேன் – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி
மேலும் கில் நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் 946 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்னும் அவர் 54 ரன்கள் எடுத்தால், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் முதல் வீரராக 1000 ரன்கள் எடுத்த வீரர் என்கின்ற சாதனையை படைப்பார். தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த இரண்டு சாதனைகளும் கில்லுக்காக காத்திருக்கிறது.






