விராட் ரோஹித் ஈடு செய்ய முடியாத வீரர்கள் இல்ல.. அகர்கர் அவங்களோட நட்பா இருக்க கூடாது – ஸ்டீவ் வாக் கருத்து

0
144
Virat

இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் இடம் நிரப்ப முடியாதது கிடையாது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியிருக்கிறார்.

மேலும் வீரர்கள் உடன் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்க்கர் நெருங்கிய நட்பை கொண்டிருக்கக் கூடாது எனவும் கூறியிருக்கிறார். தான் விளையாடிய காலத்தில் தனக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு நடக்கும் சம்பவங்கள் நடந்து இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

வீரர்கள் பெரியவர்கள் இல்லை

இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறும் பொழுது “வீரர்கள் சில பொறுப்பை ஏற்க வேண்டும். அவர்கள் எப்போதும் விளையாட்டை விட பெரியவர்கள் கிடையாது. இதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களை விளையாட்டுக்கு மேலே வைத்துக் கொள்ள முடியாது. விளையாட்டு நகர்ந்து கொண்டே இருக்கிறது. உங்கள் இடத்தை வேறு யாராவது பிடிப்பார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

“நீங்கள் ஈடு செய்ய முடியாத வீரர் கிடையாது. எனவே வீரர்கள் விளையாட்டுக்கு ஆர்டர் போட முடியாது. எல்லா விஷயங்களுக்கும் முடிவிலும், தேர்வு குழுவின் தலைவராக இருக்கக்கூடியவர் ஒரு அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில முடிவுகளை எடுத்தாக வேண்டிய இடத்தில் இருக்கிறார். அவர் அதைச் செய்தாக வேண்டும்”

- Advertisement -

நட்புடன் இருக்கக் கூடாது

“தேர்வுக்குழு தலைவராக நீங்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய யோசனைகளை உள்ளே வைக்க வேண்டும். அதே சமயத்தில் நீங்கள் வீரர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதால் கொஞ்சம் விலகி இருக்க வேண்டி இருக்கும். ஆனால் அகர்க்கர் கொஞ்சம் வீரர்களுடன் நட்புக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : 112 ரன்.. மீண்டும் ஏமாற்றிய சாய் சுதர்சன் படிக்கல்.. தெஆ கேப்டன் ஆக்ரோச சதம்.. கேஎல் ராகுல் பொறுமை – இந்திய ஏ அணி வெல்லுமா?

“ஒவ்வொரு தேர்வுக் குழு தலைவரும் வீரர்களிடம் விஷயத்தை சொல்வதில் வித்தியாசங்கள் இருக்கலாம். எனவே அவர் கொஞ்சம் இடைவெளியை கடைப்பிடிப்பது நல்லது. அதே நேரத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விஷயங்கள் சார்ந்து தொடர்பையும் கொண்டு இருக்க வேண்டும். அவர்கள் குறித்து என்ன முடிவு எடுக்கிறோம் என்பதை அவர்களுடன் பேசி செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -