ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமைக்கப்படலாம்? என்பது குறித்து பார்க்கலாம்.
நாளை பிரிஸ்பேன் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இறுதி மற்றும் ஐந்தாவது போட்டியில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வென்றால் தொடரை சமன் செய்யும். இந்தியா வென்றால் தொடரை வெல்லும்.
ஆஸ்திரேலியா அணியின் சிக்கல்
தற்போதைய ஆஸ்திரேலியா அணியில் இருந்து ஹெட், ஹேசில்வுட் என இரண்டு நட்சத்திர வீரர்கள் அடுத்து ஆசஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக சென்று விட்டார்கள். இருந்தபோதிலும் ஆடம் ஜாம்பா மற்றும் மேக்ஸ்வெல் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்குள் மீண்டும் திரும்ப வந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பலம் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அவர்களின் பௌலிங் யூனிட் போல பேட்டிங் யூனிட் வலிமையாக இல்லை. இந்திய அணி சிறப்பான பவுலிங் யூனிட்டை வைத்திருக்கின்ற காரணத்தினால் அவர்களால் இந்திய அணியின் மேல் அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
இந்திய பிளேயிங் லெவன்
கடந்த இரண்டு போட்டிகளாக களம் இறக்கப்பட்ட பிளேயிங் லெவன்தான் இந்த முறையும் களம் இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இந்திய அணி இன்னும் தொடரை வெல்லவில்லை. எனவே இந்தப் போட்டியை வெல்வதற்காக காம்பினேஷனை மாற்றாமல் திரும்ப அனுப்புவார்கள்.
அதே சமயத்தில் தொடரை வெல்ல கம்பீர் எந்த மாற்றத்தையும் அணியில் செய்யக்கூடாது. மேலும் மிக முக்கியமாக பேட்டிங் வரிசையை கன்னாபின்னாவென்று மாற்றக்கூடாது. நேற்று சிவம் துபேவை மூன்றாவது இடத்தில் அனுப்பியது போல செய்யக்கூடாது.
இதையும் படிங்க : 23.75 கோடி வேஸ்ட்.. அவரை வெளியே விட்டா வெறும் 3 கோடிக்கு கண்டிப்பா வாங்கலாம்.. முன்னாள் தேர்வு குழு தலைவர்
இந்திய பிளேயிங் XI : கில், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, சிவம் துபே, வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங் மற்றும் பும்ரா.






