இந்தியா தான் இதில் உலகில் தலை சிறந்த அணி.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – மிட்சல் மார்ஸ் கருத்து

0
592
Marsh

இன்று ஆஸ்திரேலியா அணி நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு காரணம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஸ் பேசியிருக்கிறார்.

தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 அணிகளும் விளையாடி வருகின்றன. தற்போது நான்கு போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டியை வென்று 2-1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

சூரியகுமார் சொன்னது நடந்தது

இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் டாஸ் நிகழ்வின்போது இந்த மைதானத்தின் சூழ்நிலை மற்றும் ஆடுகளம் இந்திய சூழ்நிலையை ஒத்ததாக இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் ஆடுகளம் இரண்டாவதுதாக பேட்டிங் செய்யும்பொழுது மெதுவாக மாறிவிடும் என்றும் சொல்லியிருந்தார்.

இதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 119 ரன்கள் எடுத்து சுருண்டது. இந்திய பவுலர்கள் ஒட்டுமொத்தமாக சிறப்பான செயல் திறனை வெளிப்படுத்தினார்கள். மெதுவான ஆடுகளத்தில் இந்திய பவுலர்களை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களால் சமாளிக்க முடியவில்லை.

- Advertisement -

இந்தியா தலைசிறந்த அணி

இதுகுறித்து ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் பேசும்பொழுது “இந்த ஆடுகளத்தில் இந்தியா எடுத்த ரன்களை நாங்கள் எடுக்க முடியும் என நம்பினேன். இந்த ஆடுகளம் பேட்டிங் செய்யும்பொழுது சில சவால்களை கொடுத்தது. மேலும் இந்த ரன்னை துரத்த இரண்டு பார்ட்னர்ஷிப் மட்டுமே தேவை. ஆனால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை. இந்தியா அழகான முறையில் விளையாடியது. அப்போது இந்தியா உலகின் தலைசிறந்த அணி. இந்த மாதிரியான சூழ்நிலையில் சிறப்பானவர்கள்”

இதையும் படிங்க : 50% ரன்.. துருவ் ஜுரல் ஆச்சரியமான சதம்.. ராகுல் சாய் சுதர்சன் படிக்கல் ஏமாற்றம்.. தெஆ அணி சிறப்பான பந்துவீச்சு

“எங்களால் ஒவ்வொரு ஆட்டத்திற்கும் முழு பலம் கொண்ட அணியை களம் இறக்க முடியும். ஆனால் எங்களுக்கு அடுத்து ஒரு பெரிய தொடர் வர இருக்கிறது. மேலும் நாங்கள் சில வீரர்களுக்கு உலகக்கோப்பைக்காக வாய்ப்பு கொடுக்க வேண்டி இருக்கிறது. இதுபோன்ற உயர் அழுத்தப் போட்டிகளில் விளையாடுவதின் மூலம் இந்த வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -