எங்க ஆளுங்களால வாஷிங்டன் சுந்தர மிரட்ட முடியல.. சென்னைலயே அந்த திறமையை பார்த்தேன் – ஜேசன் கில்லஸ்பி கருத்து

0
283
Gillespie

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜேசன் கில்லஸ்பி தமிழ்நாடு மற்றும் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் மிகவும் திறமையானவர் என்றும் அவருக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 22 பந்துகளில் நான்கு பிரம்மாண்டமான சிக்ஸர்கள் உடன் வாஷிங்டன் சுந்தர் ஆட்டம் இழக்காமல் 49 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். அவர் பேட்டிங் செய்த விதம் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு நம்பிக்கையையும் புதிய வழிகளையும் உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

வாஷிங்டன் சுந்தர் சிறந்தவர்

இது குறித்து ஜேசன் கில்லஸ்பி பேசும்பொழுது “வாஷிங்டன் சுந்தர் ஏன் அக்சர் படேலுக்கு கீழே பேட்டிங் வரிசையில் அனுப்பப்படுகிறார் என்று எனக்கு புரியவில்லை. அவர் எடுத்த 49 ரன்கள் சிறந்ததாக இருந்தது. மேலும் அவர் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்களால் மிரட்டப்படவில்லை. அவர் அதை எதிர் கொள்ளவே விரும்பினார். அக்சர் படேல் இந்த அணியில் கொஞ்சம் மேலே பேட்டிங் வரிசையில் இருப்பதாக நான் உணர்ந்தேன். அவர் ஒரு நல்ல வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் ஆசியாவில் சிறப்பானவராக இருப்பார்”

“நான் பயிற்சியாளராக இருந்த பொழுது சென்னையில் வாஷிங்டன் சுந்தர் உடன் கொஞ்சம் நேரம் செலவு செய்திருக்கிறேன். அவருக்கு ஒரு சிறந்த அணுகுமுறை இருக்கிறது. அவர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயல்கிறார். அதில் வெற்றி பெறுகிறார்”

- Advertisement -

அபிஷேக் ஷர்மா வேற மாதிரி

“அபிஷேக் ஷர்மா முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷமாக இருக்க முயற்சி செய்கிறார். இதன் மூலம் எடுத்ததுமே எதிரணியின் மீது அழுத்தத்தை உருவாக்க பார்க்கிறார். அவர் ஒரு உற்சாகமான இயந்திரம். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் எப்படி வருவார் என்று பார்க்க சுவாரசியமாக இருக்கும்”

இதையும் படிங்க : 138 SR.. டெஸ்ட் கிரிக்கெட்டும் ஆட வரும்.. ரஞ்சியில் மிரட்டிவிட்ட வைபவ் சூரியவன்சி.. அசத்தல் பேட்டிங்

” அபிஷேக் ஷர்மா ஒரு பந்துக்கு இரண்டு ரன்கள் எடுக்கிறார். நான் அவருடைய புள்ளி விவரங்களை சென்று பார்த்தேன் அவர் அரிதாகவே உள்நாட்டு கிரிக்கெட்டில் முதல்தர கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். பெரிய அளவில் உள்நாட்டில் 50 ஓவர் கிரிக்கெட்டும் விளையாடியது கிடையாது. ஆனால் அவர் தற்போது இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன். இது புதிய தலைமுறையின் ஐபிஎல் விளையாட்டு போன்றது. அவர் இந்திய அணிக்குள் வந்து ஒரே வடிவத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -