எங்களோட 1983 வெற்றியும் பெண்கள் பெற்ற வெற்றியும் ஒன்னு கிடையாது.. அப்படி ஒப்பிடாதீங்க – கவாஸ்கர் வேண்டுகோள்

0
63
Gavaskar

தற்போது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்றதும் 1983 ஆம் ஆண்டு ஆண்கள் அணி முதல் முறையாக உலகக்கோப்பை தொடரை வென்றதும் ஒன்று கிடையாது என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன் வித்தியாசத்தில் வென்று இந்திய பெண்கள் அணி முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

- Advertisement -

அஸ்வின் பேச்சு

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் இந்திய பெண்கள் அணியின் உலகக்கோப்பை வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விராட் கோலி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணியின் வெற்றியை உடனுக்குடன் பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில் கபில்தேவ் மற்றும் தோனி இருவரும் பெற்ற வெற்றியை விட இந்திய பெண்கள் அணி பெற்ற வெற்றி மிகச்சிறந்தது என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார். தற்பொழுது இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

எங்களுக்கு அனுபவம் இல்லை

இதுகுறித்து பேசி இருக்கும் சுனில் கவாஸ்கர் கூறும்போது “தற்போது பெண்கள் அணி பெற்று இருக்கும் இந்த உலகக் கோப்பை வெற்றியை 1983 உலகக்கோப்பை வெற்றியுடன் ஒப்பிட சிலர் முயற்சி செய்திருந்தனர். அப்போது ஆண்கள் அணி அதற்கு முன்பாக ஒரு முறை கூட நாக் அவுட் ஸ்டேஜை தொட்டது கிடையாது. முதல் சுற்றிலேயே உலகக் கோப்பை தொடர்களில் வெளியேறி வந்தார்கள். எனவே 1983 உலகக் கோப்பை அவர்களுக்கு புது அனுபவமாக இருந்தது. ஆனால் பெண்கள் அணி இதற்கு முன்பாகவே இரண்டு உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் விளையாடிய அனுபவம் பெற்றிருக்கிறார்கள்”

இதையும் படிங்க : ஏபி டிவில்லியர்ஸ் ப்ளீஸ் உதவி பண்ணுங்க.. நான் இந்த கிரிக்கெட் விளையாட என்ன செய்யணும்? – சூரியகுமார் யாதவ் கோரிக்கை

” 1983 ஆம் ஆண்டு கிடைத்த வெற்றி இந்திய கிரிக்கெட்டை உற்சாகப்படுத்தி, உலகம் முழுவதும் அதன் குரலை கேட்க செய்தது போல, இந்த வெற்றியும் இந்தியாவுக்கும் முன்பே பெண்கள் கிரிக்கெட்டை துவங்கிவிட்ட நாடுகளுக்கு, அவர்கள் ஆதிக்கம் அசைக்கப்பட்டு விட்டது என்பதை உணர்த்தும். நாங்கள் அப்போது பெற்ற வெற்றி கிரிக்கெட் விளையாட விரும்பிய குழந்தைகளை அனுமதிக்க பெற்றோர்களை தூண்டியது. இந்த வெற்றியும் பல பகுதிகளில் இருந்து பெண்களை இந்திய கிரிக்கெட்டுக்குள் கொண்டு வரும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -