இது சாதாரண வெற்றி அல்ல.. கோப்பையை வெல்ல எங்களின் இந்த விஷயம்தான் முக்கிய காரணி – இந்திய கேப்டன் பேட்டி

0
27

மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி உலகக் கோப்பையை வெற்றி பெற்று வரலாற்று வெற்றி படைத்தது.

- Advertisement -

நேற்று மும்பையில் நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் துவக்க வீராங்கனை செபாலி வர்மா 87 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக மிடில் வரிசை வீராங்கனை தீப்தி சர்மா 58 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்து 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் சொந்த மண்ணில் உலகக் கோப்பை நடத்திய இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வெற்றி பெற்று வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவூர் இந்த நிகழ்வு குறித்து சில உணர்ச்சிப் பூர்வமான கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து விரிவாக கூறும்போது “இந்த அணி கடந்த இரண்டு வருடங்களாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. இதனால் நாங்கள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இது உண்மையிலேயே இந்திய நிர்வாகம் எங்கள் மீது முதலீடு செய்ததை காட்டுகிறது. இது இங்கு நாங்கள் நிற்கும் அனைவரின் ஆரம்பமாகவும் காட்டுகிறது. நாங்கள் தடையை உடைக்க விரும்பினோம். இப்போது எங்கள் அடுத்த திட்டம் என்னவென்றால், இதனை ஒரு பழக்கமான விஷயமாக மாற்ற வேண்டியதாகும். இந்த தருணத்திற்காக தான் நாங்கள் காத்திருந்தோம் இப்போது அந்த தருணம் வந்துவிட்டது.

இதையும் படிங்க:ODI உலகக் கோப்பையை வென்றது இந்திய பெண்கள் அணி.. தீப்தி ஷர்மா செபாலி வர்மா அசத்தல் – புதிய வரலாறு

அடுத்த ஆண்டும் ஒரு உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று பல நிகழ்வுகள் இருக்கின்றன. நாங்கள் ஒவ்வொரு நாளும் முன்னேற விரும்புகிறோம் நாங்கள் எங்களது சிறந்ததை தொடர விரும்புகிறோம். இனிவரும் காலங்களிலும் நாங்கள் சிறப்பாக முன்னேறி விளையாடுவோம்” என்று அவர் பேசி இருக்கிறார்

- Advertisement -