இந்திய பெண்கள் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்ற வேண்டும் என அபிஷேக் சர்மா கூறியிருக்கிறார்.
தற்போது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை நவிமும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
இப்படி ஒரு வெற்றி வந்ததில்லை
இது குறித்து அபிஷேக் ஷர்மா பேசும் பொழுது ” நாங்கள் எல்லோருமே இந்தியா ஆஸ்திரேலியா விளையாடிய அரை இறுதி போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம். பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி இதுபோன்ற ஒரு போட்டியில் இதுவரை வென்றதில்லை என்று நினைக்கிறேன். போட்டி சென்ற விதத்தில் நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் ஒரு அணியாக காட்டிய ஒற்றுமை மற்றும் முதிர்ச்சிக்கு உண்மையிலேயே பெருமைப்படுகிறோம்”
“அந்த போட்டியில் நிறைய ரன்கள் எடுக்க வேண்டியது இருந்தது. ஜெமிமா, ஹர்மன், மந்தனா என எல்லோருமே ரன் எடுத்தார்கள். இடையில் தேவைப்படும் பொழுது சிறந்த கேமியோ வேடங்களில் நடித்தார்கள். அவர்கள் மீது அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை”
இதற்காகவே வெல்ல வேண்டும்
“நான் வெளிப்படையாக சொல்கிறேன். அணியாக அதுவும் நம்முடைய பெண்கள் அணி இவ்வளவு சிறப்பான முறையில் விளையாடிகொண்டு வரும் பொழுது, அதைப் பார்க்கக் கூடிய நமக்கும் உந்துதல் கிடைக்கும் என்பதுதான் உண்மையான விஷயம்”
இதையும் படிங்க : வெறும் 13 ஓவர்.. பாகிஸ்தான் டீமா இது?.. தென் ஆப்பிரிக்காவை வச்சு செய்து மெகா வெற்றி.. சையும் அயூப் ஆச்சரியம்
“நமது பெண்கள் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரையிறுதியில் விளையாடிய விதத்தின் காரணமாகவே அவர்கள் இந்த கோப்பையை வெல்வதற்கு தகுதியானவர்களாக இருக்கிறார்கள். நிச்சயம் அவர்கள் சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் வென்று உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.






