இதை தான் விராட் கோலி இந்திய அணிக்கு செய்வார்.. துணை கேப்டன் கில்லை பாராட்டிய தினேஷ் கார்த்திக்

0
81

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சுப்மன் கில் அடித்தது அற்புதமான இன்னிங்ஸ் என தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டினார். கில் 20 பந்துகளில் 37* ரன்கள் எடுத்ததை, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி  அடிக்கும் இன்னிங்ஸுடன் ஒப்பிட்டு கார்த்திக் கருத்து தெரிவித்தார்.

கில், கிரிக்கெட் ஷாட்களை மட்டுமே ஆடிய போதிலும், இந்திய டி20 துணைக் கேப்டன் கில் 185 ஸ்ட்ரைக் ரேட்டில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் ரன்கள் குவித்தார். கில்லின் இன்னிங்ஸ் இந்தியாவை 10 ஓவர்களில் 97/1 என்ற  நிலைக்கு கொண்டு சென்றது. ஆனால் மழை குறுக்கிட்டு போட்டியை முழுமையாக கைவிட வைத்தது.

- Advertisement -

கோலியை போல் ஆடினார்:

இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக்,  “இதுதான் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் செய்வது. ஸ்கோர்கார்டை பார்க்கும் வரை அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாது. அவர் கொஞ்ச நேரம்தான் ஆடியிருப்பார் என்று நினைப்பீர்கள். ஆனால் அவர் 45 ரன்களில் இருப்பார்.”

“அவர் யாரையெல்லாம் வெளியே வைத்திருக்கிறார் என்பதை அவர் நிச்சயம் அறிந்திருப்பார். சஞ்சு சாம்சன், யஷஸ்வி, ருதுராஜ், கே.எல். ராகுல் போன்றவர்கள் உள்ளனர். இப்போது டி20 வீரராக இருப்பது எளிதல்ல. ஏனெனில் நிலையான ஆட்டம், அபரிமிதமான திறமை மற்றும் ஒவ்வொரு இரண்டாவது அல்லது மூன்றாவது போட்டியிலும் போட்டியை வெல்லும் இன்னிங்ஸ் ஆட வேண்டும்.”

- Advertisement -

நம்பிக்கை தரும்:

“ஆனால் அவர் இந்திய கேப்டன் மற்றும் துணை கேப்டன் என்பது அவருக்கு நிறைய நம்பிக்கை தரும். அது ஒரு கட்டம் வரை உதவும்.  ஆனால் பிறகு வெளியே சென்று ரன்கள் குவிக்க வேண்டும்.  இன்று அவர் அதை அழகாக செய்தார். ஆசியகோப்பை அவருக்கு சிறப்பாக அமையவில்லை.  ஆனால் இன்று வாய்ப்பை இரு கைகளாலும் பற்றி அழகான ஷாட்கள் ஆடினார்.”

இதையும் படிங்க: சூர்யகுமார் இனி வாழ்க்கையில் இந்த தவறை செய்யக் கூடாது.. இந்திய அணிக்கு அது ரொம்ப முக்கியம்- உத்தப்பா கருத்து

“இதுதான் அவரிடமிருந்து பார்க்க விரும்பும் இன்னிங்ஸ். அவர் நூறு அடிக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எந்த வேகத்தில் நூறு அடிக்கிறார் என்பதுதான் எல்லோரும் பார்க்கும் விஷயம். இப்படி ஆடினால், இந்தியாவுக்கு அழகாக செய்வார்” என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.சுப்மன் கில்   29 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கில்லிம் சராசரி 30க்கும் கீழே  142.96 ஸ்ட்ரைக் ரேட்டில் உள்ளது.

- Advertisement -