ஓவருக்கு 10 ரன்.. கம்பேக் கொடுத்து மிரட்டிய சூர்யா கில்.. அரண்டு போன ஆஸி.. மழையால் நடந்த சோகம்

0
266
Surya

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன முதல் டி20 போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், இன்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பெரா மைதானத்தில் தொடங்கியது.

- Advertisement -

ஆஸ்திரேலியா பக்கம் அதிர்ஷ்டம்

இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று வந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் போது மழை வருவதற்கான வாய்ப்புகள் இருந்த காரணத்தினால் ஆஸ்திரேலியாவிற்கு இது சாதகமான சூழ்நிலையை உருவாக்கியது. இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒருமுறை கூட டாஸ் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய பவுலிங் யூனிட்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா இவருக்கு அடுத்து மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக சிவம் துபேவை வைத்து, அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மூன்று ஸ்பின்னர்களை ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கி கம்பீர் ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

கில் சூரியகுமார் அசத்தல்

இன்று முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 14 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் இன்னொரு முனையில் துணை கேப்டன் கில் அசத்தலாக விளையாடினார். அவர் 20 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் இழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்தார்.

இன்னொரு முனையில் பார்ம் இல்லாமல் தடுமாறி வந்த கேப்டன் சூரியகுமார் சிறப்பாக விளையாடி 24 பந்தில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் இழக்காமல் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்திய அணி ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தாண்டி, 9.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது.

இதையும் படிங்க: மும்முனை பிளான்.. எங்களுக்கு யுஏஇ ஆஸி ரெண்டும் ஒன்னுதான்.. கெத்து காட்டிய கம்பீர் மூவ்

இந்த நிலையில் இரண்டாவது முறையாக குறுக்கிட்ட மழை நிற்கவேயில்லை. இதனால் போட்டியை கைவிடுவதாக ஆட்ட நடுவர்கள் அறிவித்தார்கள். இதன் காரணமாக இரு நாட்டு ரசிகர்களும் பெரிய அளவில் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். அதே சமயத்தில் ஃபார்ம் இல்லாமல் இருந்து வந்த கில் மற்றும் சூரியகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி இருப்பது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது.

- Advertisement -