9-வது விக்கெட்டிற்கு 94 ரன்கள்.. சவுத் ஷகீல் 208*… இலங்கைக்கு பாகிஸ்தான் பதிலடி..பரபரப்பான முடிவை நோக்கி முதல் டெஸ்ட்!

0
1357

பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்செய்த டிசில்வா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 312 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது . மிகச் சிறப்பாக விளையாடிய தனஞ்செயா டிசில்வா 122 ரன்களையும் மேத்யூஸ் 64 ரன்களையும் எடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷாஹீன் அப்ரிதி நசிம் ஷா மற்றும் அப்ரார் அகமத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் ஆடிய பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும் இமாமுல் ஹக் போன்ற வீரர்கள் ஏமாற்றிய நிலையில் 101 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது .

அப்போது அந்த அணியின் புதுமுக வீரர்களான சவுத் ஷகீல் மற்றும் சல்மான் அகா இருவரும் ஆறாவது விக்கெட்க்கு மிகச் சிறப்பாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்கள் இருவரும் ஆறாவது விக்கெட் ஜோடியாக 177 ரன்களை சேர்த்தனர். இந்நிலையில் 83 ரன்கள் எடுத்திருந்த சல்மான் ரமேஷ் மெண்டிஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து சதம் எடுக்கும் வாய்ப்பை இழந்தார் .

பின் வரிசை ஆட்டக்காரர்களுடன் சிறப்பாக விளையாடிய சவுத் ஷகீல் டெஸ்ட் போட்டிகளில் தனது சதத்தை பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுக்கும் இரண்டாவது சதமாகும் . பின் வரிசை ஆட்டக்காரர்களுடன் இணைந்து சிறப்பாக ஆடிய அவர் அணியின் ஸ்கோர் உயர உதவினார். ஒன்பதாவது விக்கெட்க்கு நசிம் ஷாவுடன் இணைந்த அவர் 94 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணி 400 ரன்களை கடக்க உதவினார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் முன்னிலை நூறு ரண்களை கடந்து சென்றது.

- Advertisement -

பின் வரிசை ஆட்டக்காரர்களின் துணையுடன் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் சவுத் ஷகீல். மேலும் இந்த போட்டியில் மேலும் ஒரு சாதனையையும் அவர் படைத்திருக்கிறார் . முதல் ஆறு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது ஒரு இன்னிங்ஸ் 50 ரன்கள் நான்கு வீரர்கள் மட்டுமே எடுத்திருக்கின்றன. அந்த சாதனையையும் முறியடித்து இருக்கிறார் சவுத் ஷக்ல். இதற்கு முன்பு இந்த சாதனையை சுனில் கவாஸ்கர், பசில் புட்சர், சயீத் அகமது மற்றும் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் படைத்திருந்தனர். தற்போது இவர்களுடன் இணைந்து இருக்கிறார் சவுத் ஷகீல்.

பாகிஸ்தான் அணி 461 ரகளை எடுத்திருந்த போது இறுதி விக்கெட் ஆன அப்ரார் அகமது 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி 461 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சவுத் ஷகீல் 208 ரண்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இலங்கை அணியின் பந்து வீச்சில் ரமேஷ் மெண்டிஸ் 5 விக்கெட்டுகளையும் பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை விட 149 ரன்கள் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றிருக்கிறது இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 14 ரன்களுக்கு விக்கெட் எதுவும் இழப்பின்றி இருந்தது . நிஷான் மதுஷங்க்கா 8 ரன்கள்டனும் கருனரத்தினே ஆறு ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ள நிலையில் பாகிஸ்தான் அணியே இந்த டெஸ்ட் போட்டியில் தற்போது முன்னணியில் இருக்கிறது.