விராட் கோலிக்கு நடந்த மாதிரி நிறைய நடந்துருக்கு, எப்பவும் பேட்ஸ்மேன்க்கு சாதகமாக தான் கொடுப்பாங்க – முன்னாள் ஆஸி., வீரர் கருத்து!

0
877

இரண்டாவது டெஸ்டில் விராட் கோலி ஆட்டம் இழந்ததைப் போல இதற்கு முன்னரும் நடந்திருக்கிறது. 10க்கு 9 முறை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவு கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னால் வீரர் மார்க் வாக்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 44 ரன்கள், அஸ்வின் 37 ரன்கள் மற்றும் அக்சர் பட்டேல் 74 ரன்கள் அடிக்க, இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் இன்னிங்ஸில் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 44 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்த அவருக்கு அறிமுக வீரர் மேத்யூ குனமன் பந்து வீசினார். அப்போது எல்பிடபிள்யூ முறையில் களத்தில் இருந்த நடுவர் அவுட் என்று அறிவித்தார்.

இதற்கு விராட் கோலி மேல்முறையீடு செய்ததால், மூன்றாம் நடுவரிடம் முடிவு சென்றது. விராட் கோலி எதிர்கொண்ட பந்து மீண்டும் மீண்டும் ரீ-ப்ளே செய்து பார்த்தபிறகும் அவர் அவுட் என்று அறிவித்தார் 3ம் நடுவர்.

- Advertisement -

அந்த ரீ-ப்ளைவில் பந்து முதலில் பேட்டில் பட்டது போல தெரிந்தது. இருப்பினும் 100 சதவீதம் உறுதியாக தெரியவில்லை. இப்படியான சூழலில் பெரும்பாலும் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக முடிவை கொடுப்பார்கள். ஆனால் விராட் கோலிக்கு சாதகமாக அமையவில்லை. ஆகையால் இது சர்சையாக மாறியுள்ளது.

இந்நிலையில் விராட் கோலி விக்கெட் குறித்து பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மார்க் வாக் கூறியதாவது:

“நான் இதுவரை பார்த்ததில் பத்து முறைக்கு 9 முறை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அவுட் இல்லை என்று கொடுப்பார்கள். விராட் கோலி துரதிஷ்டவசமானவர். இன்று அவருக்கு எதிராக முடிவு வந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. களத்தில் இருக்கும் நடுவர் அவுட் என்று கொடுத்தாலும் மூன்றாம் நடுவர் மீண்டும் மீண்டும் பார்த்து அவுட்டா? இல்லையா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அவருக்கும் 100% உறுதியாக தெரியவில்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக கொடுக்க வேண்டும். அப்படி நடக்காது எனக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.” என்றார்.