8 சிக்ஸர்.. 441 ஸ்ட்ரைக் ரேட்.. 25 வயது இந்திய வீரர் அதிவேக அரைசதம்.. யுவராஜ் சிங் சாதனை உடைப்பு.. சூடு பிடிக்கும் சையத் முஸ்டாக் அலி டிராபி!

0
5130
SMAT

இந்தியாவில் அக்டோபர் 16ஆம் தேதி துவங்கி நவம்பர் 6ஆம் தேதி வரையில், உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் சையத் முஸ்டாக் அலி டிராபி நடைபெறுகிறது!

தற்பொழுது இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற்ற போதும் கூட, இந்திய கிரிக்கெட் வாரியம் இடையில் சையத் முஸ்டாக் அலி டி20 தொடரை நடத்துகிறது.

- Advertisement -

உலகில் எந்த கிரிக்கெட் நாடாக இருந்தாலும் டி20 கிரிக்கெட்டில் தற்காலகட்டத்தில் வலிமையாக இருந்தால்தான், வணிக லாபங்களை பெற முடியும். எனவே இந்தத் தொடர் இந்தியாவில் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

மேலும் 10 ஐபிஎல் அணிகளும் இந்தியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரை மிக உன்னிப்பாக தங்களுடைய ஊழியர்களை அனுப்பி கவனித்து தங்களுக்கான வீரர்களை தேடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ரயில்வேஸ் அணி அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியை ராஞ்சியில் நடைபெற்றது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் குவித்தது. ரயில்வேஸ் அணிக்கு 4வது பேட்ஸ்மேன் ஆக வந்த உபேந்திரா யாதவ் 51 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் குவித்தார்.

அடுத்து பேட்டிங்கில் ஆறாவது இடத்தில் வந்த அசுதோஸ் சர்மா அதிரடியாக 11 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் அரை சதம் அடித்து, யுவராஜ் சிங் முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்தில் அடித்திருந்த அதிவேக அரை சத சாதனையை முறியடித்தார். மொத்தம் 12 பந்துகள் சந்தித்த அவர் 53 ரன்கள் எடுத்தார். 25 வயதான இவர் மத்திய பிரதேச அணிக்காக ஆரம்பத்தில் விளையாடினார். தற்பொழுது ரயில்வே அணிக்காக விளையாடி வருகிறார்.

இதற்கு அடுத்து விளையாடிய அனுபவம் இல்லாத அருணாச்சல் பிரதேஷ் அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. ரயில்வேஸ் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.