77நாட்கள்.. 7டெஸ்ட்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணிக்கு என்ன புதிய சவால்?

0
1572
ICT

டெஸ்ட் கிரிக்கெட் சுவாரசியப்படுத்தி காப்பாற்றும் பொருட்டு, ஐசிசி நான்கு வருடங்களுக்கு முன்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்கின்ற புதிய தொடரை உருவாக்கியது.

இதன்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்படும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்றன.

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் வருவதால், மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. எல்லா அணிகளும் வெற்றியை நோக்கி விளையாடுகின்றன.

இது மட்டும் இல்லாமல் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் நாடுகளை டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யப்படுத்தும் விதமாக, போட்டியில் முடிவு தெரிவதற்காக, ஆடுகளங்களை அதற்கேற்ற முறையில் அமைக்கவும் அறிவுறுத்தி இருக்கிறது. எனவே முன்பை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் சுவாரசியம் கொஞ்சம் அதிகம் ஏற்பட்டு இருப்பது உண்மை.

கடந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளிடமும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்தது.

- Advertisement -

தற்பொழுது மூன்றாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு, இந்திய அணிக்கு இன்றிலிருந்து 77 நாட்களுக்குள் முக்கியமான ஏழு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இந்த ஏழு டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல முடிவை இந்திய அணி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீண்டும் ஒருமுறை இந்திய அணியை வரவேற்கும்.

தென் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிராக இன்று துவங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும், இதேபோல் ஜனவரி 25 முதல் மார்ச் 11 வரை, இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் விளையாட இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் என, ஏழு டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

இன்றிலிருந்து 77 நாட்களில் இந்த ஏழு டெஸ்ட்களில் மட்டும் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கு அடுத்து புதிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கும். மிகக்குறிப்பாக அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட இந்திய அணி செல்வது குறிப்பிடத்தக்கது. அந்தத் தொடரை அழுத்தம் இல்லாமல் அணுக, அதற்கு முன்பாக நடக்க இருக்கும் ஏழு டெஸ்ட் போட்டிகள் இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!