ஐபிஎல் முடிஞ்சி, நேஷனல் டியூட்டி-க்கு கெளம்புங்க.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பக்கா பிளான் போடும் பிசிசிஐ! – அஸ்வின், விராட் கோலி-க்கு வந்த உத்தரவு!

0
1059

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களில், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத வீரர்கள் உடனடியாக இங்கிலாந்துக்கு செல்லும்படி பிசிசிஐ தரப்பிலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. இவர்கள் எப்போது இங்கிலாந்து செல்ல வேண்டும்? யார் யார் செல்கிறார்கள்? என்கிற தகவல்களும் வந்திருக்கிறது.

ஐபிஎல் லீக் சுற்றுகள் முடிவடைந்து விட்டன அடுத்ததாக பிளே-ஆப் சுற்றுகள் மற்றும் 28ஆம் தேதி ஐபிஎல் பைனல் நடைபெறுகிறது. இவை முடிவடைந்தபிறகு வருகிற ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நடக்கிறது. இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலில் விளையாடுகிறது. இம்முறை ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -

கடைசியாக 2013ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியை பைனலில் வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி பெற்றது. அதன் பிறகு ஐசிசி கோப்பைகள் எதையும் இந்திய அணி வெல்லவில்லை.

2014 டி20 உலகக்கோப்பை பைனல், 2015 50-ஓவர் உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை மற்றும் 2019 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் செமி பைனலில் முடித்தது. கடந்த 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா வெளியேறியது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவிற்கு ஐசிசி கோப்பைகள் எதுவும் கிடைக்கவில்லை. இம்முறை அதை தவறவிடக்கூடாது என்று பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது பிசிசிஐ தரப்பு.

- Advertisement -

ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைந்து விட்டதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லாத இந்திய வீரர்களை முதற்கட்டமாக இங்கிலாந்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.

மொத்தம் 11 பேர் செல்கின்றனர். இதில் ரிசர்வ் மற்றும் மெயின் அணியின் வீரர்கள் 8 பேர் மற்றும் மூன்று நெட் போலர்கள் இடம்பெற்றுள்ளனர். மீதம் இருக்கும் வீரர்கள் பிளே-ஆப் சுற்றும் முடிவடைந்த பிறகு நேரடியாக இங்கிலாந்து செல்வர்.

விராட் கோலி, ரவி அஸ்வின், அக்ஸர் பட்டேல், சர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜெயதேவ் உனட்கட், உமேஷ் யாதவ் ஆகிய மெயின் வீரர்களும், முகேஷ் குமார் ரிசர்வ் வீரரும், அனிகேட் சவுத்ரி, ஆகாஷ் தீப் மற்றும் யாரா ப்ரிதிவிராஜ் ஆகிய நெட் பவுலர்களும் செல்கின்றனர். முதற்கட்டமாக இங்கிலாந்து செல்கின்றனர். இவர்கள் 23ஆம் தேதி மாலை பயணிக்கின்றனர்.