62 பந்து 16 சிக்ஸர்.. பாகிஸ்தான் அணிக்கு பயம் காட்டிய பின் ஆலன்.. நியூசிலாந்து அதிரடி வெற்றி

0
2581
Allen

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக்கொள்ளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்பொழுது நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்திருக்கும் முதல் இரண்டு டி20 போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று தொடரின் பலமான முன்னிலை வகித்தது. இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் துவக்க வீரர்களாக களம் வந்தார்கள்.

கான்வே 7 ரன்களில் வெளியேறினார். காயம் அடைந்த வில்லியம்சனுக்கு பதிலாக இன்றைய போட்டிக்கு வந்த செய்பர்ட் இணைந்தார். இன்னொரு முனையில் பின் ஆலன் அதிரடியில் பாகிஸ்தான் பந்துவீச்சை வதம் செய்தார்.

- Advertisement -

மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் பாகிஸ்தான் பந்து வீச்சை நொறுக்கி தள்ளிய அவர் 62 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்கள் அடித்து 137 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவருடன் இணைந்து விளையாடிய செய்பர்ட் 31 ரன்கள் எடுத்தார். பிலிப்ஸ் 19 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் நியூசிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் பின் ஆலன் நியூசிலாந்து அணிக்கு டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற மெக்கலமின் சாதனையை 12 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்தார். மேலும் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையையும் பகிர்ந்திருக்கிறார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் தொடர்ச்சியாக மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்து 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதுக்கு அடுத்து ரிஸ்வான் 24 முகமது நவாஸ் 28 ரன்கள் எடுத்தார்கள்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளை வென்று தொடரையும் நியூசிலாந்து அணி வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பாகிஸ்தான் டி20 கேப்டன் ஷாகின் ஷா அப்ரிடி முதல் தொடரை இழக்கிறார்.

- Advertisement -