6,1,4,6,6,2,6.. ஏழே பந்தில் வந்த வெற்றி.. கடைசி ஓவர் திரில்லர்.. வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து மேட்ச்சில் திருப்பம்!

0
1860
England

தற்பொழுது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக அந்த நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று வலிமையான முன்னிலையில் இருந்தது.

இந்த நிலையில் மூன்றாவது டி20 போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பிரண்டன் கிங் 8, கையில் மேயர்ஸ் 0 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதற்கடுத்து வந்த ஷாய் ஹோப் 29, கேப்டன் ரோமன் பவல் 21 பந்தில் 39, ரூதர் போர்டு 17 பந்தில் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கடந்த இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாத நிக்கோலஸ் பூரன் இந்த முறை 45 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 82 ரன்கள் எடுத்தார்.

கடைசி கட்டத்தில் ரசல் ஐந்து பந்தில் எட்டு ரன்கள் எடுக்க, ஜேசன் ஹோல்டர் ஐந்து பந்தில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் மூலம் 18 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டிஸ் ஆறு விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் இருவரும் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

இந்த ஜோடி 11.2 ஓவரில் 115 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 34 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ஒரு ரன்னிலும், லிவிங்ஸ்டன் 18 பந்தில் 30 ரன்கள் எடுத்தோம் வெளியேறினார்கள். இன்னொரு முனையில் சிறப்பாக அதிரடியாக விளையாடிய பில் சால்ட் சதம் அடித்தார்.

இந்த நிலையில் ரசல் வீசிய கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு இருபது ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு சிங்கிள் என ஏழு ரன்கள் ஏற்கனவே எடுத்திருந்த ஹாரி புரூக் பேட்ஸ்மேன் முனையில் இருந்தார்.

குறிப்பிட்ட அந்த ரசலின் கடைசி ஓவரை ஹாரி புரூக் சிதைத்து விட்டார். அந்த ஓவரில் 4, 6, 6, 2, 6 என மொத்தம் 24 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணிக்கு முதல் வெற்றியை கொண்டு வந்தார். அவர் மொத்தம் ஏழு பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இன்னொரு முனையில் பில் சால்ட் 56 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 109 ரன்கள் எடுத்தார். தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 1-2 என நீடிக்கிறது!