6 ரன்கள் அறிவிப்பு.. திடீரென 5 ரன்னாக குறைத்த அம்பயர்.. என்ன காரணம்?.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

0
261
England

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி முதல் நாளின் முடிவில் இந்திய அணி தற்போது முன்னிலையில் இருக்கிறது.

இந்த போட்டியில் இந்தியா டாஸ் தோற்க முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 200 ரன்கள் எட்டாது என்கின்ற நிலையில் இருந்தது. 180 ரன்கள் சுருட்டி விடலாம் என இந்திய கேப்டன் மற்றும் அணியினர் கணக்கு போட்டு இருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் வழக்கம்போல் ஆபத்தான நேரங்களில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்த முறையும் 88 பந்தில் 70 ரன்கள் குவித்து 246 ரன்கள் என்கின்ற கௌரவமான இடத்திற்கு இங்கிலாந்து அணியை கொண்டு சென்று விட்டார். இந்திய அணி தற்போது 119 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் இழந்து இருக்கிறது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். இதற்கு அடுத்து சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரேகான் அஹமத் விளையாடுவதற்கு வந்தார்.

அந்த நேரத்தில் பந்து வீசிக் கொண்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா அவருக்கு ஒரு ஃபுல் டாஸ் பந்தை வீசினார். லெக் சைடில் பின்புறம் தட்டி விட்டு ரேகான் அஹமத் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் இருவரும் இரண்டு ரன்கள் ஓடினார்கள்.

- Advertisement -

அந்தப் பந்தை பிடித்து கீப்பருக்கு வீசிய பொழுது கீப்பரும் தவறவிட, கீழ்ப்பருக்கு பின்னால் பந்தை பாதுகாக்க நின்றிருந்த இந்திய பீல்டரும் தவறவிட, பந்து பவுண்டரிக்கு சென்று விட்டது.

இதன் காரணமாக ஓடி எடுத்த இரண்டு ரன்கள் மற்றும் ஓவர் த்ரோ மூலமாக கிடைத்த நான்கு ரன்கள் என மொத்தம் ஆறு ரன்கள் இங்கிலாந்து ரேகான் அஹமத் கணக்குக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அம்பயர் திடீரென அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து, ஆறு ரன்கள் வழங்கப்பட்டதற்கு ஒரு ரன் குறைத்து 5 ரன் என வழங்கினார். இதை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அந்த நேரத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டது.

இதையும் படிங்க : “இது பாஸ்பால் கிடையாது அதுக்கும் மேல” – இங்கிலாந்து அணியை சீண்டி இந்தியாவை பாராட்டிய ஏபி டிவில்லியர்ஸ்

ஓவர் த்ரோவுக்கான கிரிக்கெட் விதி 19.8ல் கூறப்பட்டு இருப்பது, ஃபீல்டர் பந்தை பிடித்து அடிக்கும் பொழுது, அவர் கையில் இருந்து பந்து வெளியேறும் நேரத்தில், ரன்னுக்காக ஓடும் இரண்டு பேட்ஸ்மேன்களும் கிராஸ் செய்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ரன் வழங்கப்படும். ஒருவேளை கிராஸ் செய்ய வில்லை என்றால் அந்த ரன் கணக்கில் கொள்ளப்படாது. இந்த விதியின் அடிப்படையில் தான் ஒரு ரன்னை அம்பயர் என்று குறைத்தார்.

2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோதிக்கொண்ட பொழுது, இப்படி இரண்டு ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால் இன்று போல் அன்று நுட்பமாக இந்த விதியை பின்பற்றி பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.