டாப் 10

ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன் அதிக ரன்களை குவித்த போதிலும் தோல்வியை தழுவிய 6 தருணங்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒருநாள் தொடர்களின் வருகைக்குப் பின்னர், கிரிக்கெட் போட்டி என்பது வெகு விமர்சையாக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு முதன்முதலாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 40 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதற்கு பின்னர்தான், சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் கைகள் ஓங்க துவங்கின.

- Advertisement -

இத்தகைய ஒருநாள் போட்டிகளில், 1972ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் தான் முதலாவது சதம் அடிக்கப்பட்டது. இதனை அடித்தவர் இங்கிலாந்து அணியை சார்ந்த டேனிஷ் மிஷ். பிற்காலங்களில் சதம் என்பதை மீறி 150+ ரன்களையே பேட்ஸ்மேன்கள் சர்வ சாதாரணமாக குவித்தனர். 1993ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ராபின் ஸ்மித் 167 ரன்களை குவித்து போதிலும் இவரது அணி வெற்றி பெறவில்லை. இது ஒரு மோசமான சாதனை வகையில் ரசிகர்களால் பார்க்கப்பட்டது இது போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணியின் வீரர் அதிக ரன்கள் குவித்த போதிலும் அந்த அணி வெற்றி பெறாமல் போவது என்ற நிகழ்வு பலமுறை அரங்கேறியுள்ளது.

6.டேவிட் வார்னர் – 173

ஆஸ்திரேலியாவின் தற்கால சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க வீரரான டேவிட் வார்னர், தனது அசாத்திய திறமையால் உலகெங்கும் நடைபெறும் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடாமல் சர்வதேச கிரிக்கெட்டில் தடம்பதித்த வெகுசில வீரர்களில் இவரும் ஒருவர். 123 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 52 67 ரன்களை குவித்துள்ளார் 16 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 173 ரன்களை குவித்த போதிலும் ஆஸ்திரேலிய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

5.சச்சின் டெண்டுல்கர் – 175

2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் மறக்க முடியாத நாளாக அது அமைந்தது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி 351 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்து முதல் விக்கெட்டுக்கு 66 ரன்களை குவித்தனர். அதன்பின்னர், விரைவிலேயே அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை விக்கெட்களை இழந்தபோதிலும் சச்சின் டெண்டுல்கர் மனம் தளராமல் 19 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட 175 ரன்களை குவித்தார். ஆனாலும் அணியை தோல்வியின் பிடியில் இருந்து இவரால் மீட்க முடியவில்லை. இறுதியில் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது இந்தியா.

- Advertisement -

4.எவன் லெவிஸ் – 176

வெஸ்ட் இண்டீஸ் அணியின் திறமைமிக்க தொடக்க வீரரான லெவிஸ், டி20 போட்டிகளைப் போலவே ஒரு நாள் கிரிக்கெட்டிலும் அதிரடியாக ரன்களை குவிப்பதில் வல்லவர். 2017ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. தொடரின் நான்காவது போட்டியில் 129 பந்துகளை சந்தித்த லெவிஸ், 176 ரன்களை குவித்து தனது அணி 376 என்ற ஒரு மாபெரும் ஸ்கோரை எட்ட உதவினார். இதன் பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 35.1 ஓவர்களிலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

3.மேத்யூ ஹைடன் – 181

உலகெங்குமுள்ள கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்திய காலங்களில் தனது அசாத்திய பேட்டிங் மூலம் தனக்கென தனி இடம் பதித்தவர், மேத்யூ ஹைடன். இதுவரை இவர் களம் கண்டுள்ள 161 ஒருநாள் போட்டிகளில் 6133 ரன்களை குவித்துள்ளார். 2007ஆம் ஆண்டு சேப்பல்-ஹெட்லி ஒருநாள் தொடரில் தான் இவருக்கு ஆகச்சிறந்த தனிநபர் அதிகபட்ச ரன் கிடைக்கப்பெற்றது. 11 பவுண்டரிகள், 10 சிக்சர்களை உள்ளடக்கிய அதிரடியான ஆட்டத்தால் 181 ரன்கள் இவரால் மட்டுமே வந்தது. இருப்பினும், பின்னர் களம் கண்ட நியூஸிலாந்து அணியின் மேக்மில்லன் மற்றும் பிரண்டன் மெக்கலம் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றது.

2.பகர் சமான் – 193

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கொண்டுள்ள இவர், இரண்டாவது முறையாக இரட்டை சதத்தை அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது. 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைக் கண்டது. இதன் மூலம் இந்த பட்டியலில் இவர் இணைந்துள்ளார்.

1.சார்லஸ் கவண்டரி – 194

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஜிம்பாப்வே அணியில் தனிநபர் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை தன் வசம் வைத்துள்ளார், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சார்லஸ். 2009ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கலந்துகொண்ட சார்லஸ், 312 என்ற இமாலய இலக்கை எட்ட உதவினார். அந்த போட்டியில் 194 ரன்கள் குவித்து சாதனை புரிந்தார். இருப்பினும், வங்கதேச அணியின் தமிம் இக்பால் 154 ரன்கள் குவித்து இரு ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில், வங்கதேச அணியை வெற்றி பெறசெய்தார்.

Published by