148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில்.. முதல்முறையாக நிகழ்த்தப்பட்டுள்ள வரலாற்று சாதனை.. இந்தியா 2வது இடம்.. முழு விபரம்

0
39

டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 148 ஆண்டுகளில் இல்லாத ஒரு வரலாற்றுச் சாதனை இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை

2024ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அதில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்டில் அதிக ஆதிக்கம் செலுத்தி இருக்கிறது. மொத்தமாக இந்த ஆண்டு 17 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி அதில் 9 போட்டிகளில் வெற்றியும், 8 போட்டிகளில் தோல்வியும் தழுவி அதிக வெற்றிகளை பெற்ற அணியாக முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்ததாக இந்திய அணி 15 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.

இதில் இந்திய அணி கடைசியாக விளையாடிய ஏழு டெஸ்ட் போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 148 ஆண்டுகாலடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஆண்டும் நிகழாத சாதனை இந்த ஆண்டு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து அணி முதல் இடம்

அதாவது 2024ஆம் ஆண்டு 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஆண்டும் இப்படி ஒரு சாதனை நிகழாத நிலையில் முதல் ஆண்டு டெஸ்ட் வெற்றிகளில் ஒரு அரை சதம் அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதில் குறிப்பாக இங்கிலாந்து 9, இந்தியா 8, நியூசிலாந்து 6, தென் ஆப்பிரிக்கா 6, இலங்கை 6, ஆஸ்திரேலியா 6, பங்களாதேஷ் 3, அயர்லாந்து 2, பாகிஸ்தான் 2, வெஸ்ட் இண்டீஸ் 2 என 50 டெஸ்ட் வெற்றிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரோஹித் செஞ்ச மாதிரி.. கோலிக்கு செய்ய எல்லாரும் பயப்படுறாங்க.. ஆனா இதுதான் நேரம் – பாக் பசித் அலி பேட்டி

இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஆண்டுமே நிகழ்த்தப்படாத ஒரு சாதனை இந்த ஆண்டு முதல்முறையாக நிகழ்த்தப்பட்ட இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கப்பட்ட பிறகு அனைத்து அணிகளும் வெற்றிக்காக போராடி வருகின்றன. அது மட்டுமல்லாமல் ரசிகர்களின் ஆதரவும் இந்த தொடருக்கு பெரிய அளவில் இருக்கிறது. எனவே இனி அடுத்த ஆண்டும் இது போன்ற பல சாதனைகள் நிகழும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -