விராட் கோஹ்லியின் கேப்டன்சியில் நட்சத்திர வீரர்களாக உயர்ந்த 5 வீரர்கள்

0
206
Yuzvendra Chahal and KL Rahul

இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா தலைமை ஏற்றுள்ளார் விராட் கோஹ்லி கேப்டனாக தன் கடைசி ஒருநாள் போட்டியை மார்ச் மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆடினார். முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி இந்திய அணியின் வெற்றிக்காக அயராது உழைத்தார். 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப் போட்டி, 2019 உலகக்கோப்பையில் அரை இறுதி வரை அழைத்துச் சென்றார். அவரால் ஒரு ஐசிசி கோப்பையை கூட உயர்த்த முடியவில்லை. அதனால் அவர் சிறந்த கேப்டன் இல்லை என்றாகாது. அவருக்கு கீழ் பல நட்சத்திர வீரர்கள் உயர்ந்துள்ளனர். அதில் 5 வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு காண்போம்.

கே.எல்.ராகுல்

நடப்பு அதிரடி இந்திய ஒப்பனர் ராகுல் தன் அறிமுகப் போட்டியை விராட் கோஹ்லியின் கேப்டன்சியில் ஆடினார். அவருக்கு கீழ் ஆடிய 33 இன்னிங்சில் 1253 ரன்கள் சேர்த்தார். அதில் 7 அரை சதம் மற்றும் 4 சதங்கள் அடங்கும். 43.20 எனும் சிறப்பான சராசரி வைத்துள்ளார். இந்திய அணியில் இவருடைய இடம் உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

- Advertisement -

கேதார் ஜாதவ்

முன்னாள் இந்திய மிடில் ஆர்டர் ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ், ஒருநாள் போட்டிகளில் 54 இன்னிங்ஸ் பேட்டிங் செய்துள்ளார். அதில் 40 இன்னிங்ஸ்கள் விராட் கோஹ்லிக்கு கீழ் ஆடப்பட்டது. பேட்டிங்கில் 1068 ரன்களும் பவுலிங்கில் 14 விக்கெட்டுகளும் எடுத்தார். கேப்டனாக கோஹ்லியின் முதல் முழு நேர போட்டியில் ஜாதவ் விளாசிய சதத்தை எந்த ஒரு இந்திய ரசிகர்கராலும் மறக்க இயலாது.

அம்பாத்தி ராயுடு

இப்பட்டியல் இருக்கும் மற்றொரு வலதுகை பேட்ஸ்மேன், ராயுடு. விராட் கோஹ்லி வழிநடத்திய இந்திய அணிக்காக 23 இன்னிங்சில் 47.64 எனும் சராசரியில் 810 ரன்கள் அடித்ததார். சிறப்பான ஃபார்மில் இருந்த ராயுடு துரதிர்ஷ்டவசமாக 2019 உலகக்கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அவர் இருந்திருந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்று ரசிகர்கள் நினைக்கின்றனர்.

குல்தீப் யாதவ்

2017 சாம்பியன்ஸ் தொடருக்கு பின்னர் பிசிசிஐ, ஃபிங்கர் ஸ்பின்னர்களை நீக்கிவிட்டு விரிஸ்ட் ஸ்பின்னர்களை அணிக்குள் கொண்டுவந்தது. அதில் ஒருவர் குல்தீப் யாதவ். ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் உட்பட பல சாதனைகள் படைத்தார். 54 போட்டிகளில் 92 விக்கெட்டுகள் வீழ்த்தி, கேப்டன் விராட் கோஹ்லிக்கு கீழ் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். கடந்த சில வருடங்களாக இவர் இருக்கும் இடமே முடியவில்லை. அனைத்து வீரர்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. ஆதலால் இவருக்கு போதிய வாய்ப்பும் கிடைக்கவில்லை.

- Advertisement -

யுஸ்வேந்திர சாஹல்

விரிஸ்ட் ஸ்பின்னர்கள் இருவர்களில் மற்றொரு வீரர் சாஹல். இவர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து இந்திய அணிக்காக அயராது பணியாற்றி உள்ளனர். முக்கிய கட்டத்தில் மிக முக்கியமான விக்கெட்டை வீழ்துவதில் யுஸ்வேந்திர சாஹல் வல்லவர். 41 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 71 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பைக்கு பிசிசிஐ இவரை தேர்வு செய்யவில்லை. அது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. தற்போது சிறப்பாக ஆடி சாஹல் மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார்.